புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்ட, திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசிகையில், “ராகுல் காந்திக்கு கிடைத்திருக்கக்கூடிய தீர்ப்பு நீதிக்கு கிடைத்திருக்கும் தீர்ப்பு. நீதி வென்றிருக்கிறது என்று தான் கூற வேண்டும். மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை வரும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது அமைந்திருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ராகுல் காந்தி பங்கேற்பார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், யார் மனதையும் புண்படுத்தாமல், குறிப்பாக, அரசியல் நாகரீகத்தோடு பேச வேண்டும். இந்தியை விருப்பப்பட்டு படிப்பது என்பது வேறு. திணிப்பது என்பது வேறு. எனவே அமித் ஷாவுக்கு பயந்து இங்கு யாரும் இல்லை. இந்தி திணிப்பை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்லும் இடங்களில் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. பணம் கொடுத்து சில இடங்களில் கூட்டத்தை கூட்டி வந்திருக்கின்றனர். முதலில் அவர் செல்வது பாதயாத்திரையே இல்லை. சிறிது தூரம் நடந்துவிட்டு காரில் பயணம் செய்கிறார். காரில் தான் யாத்திரை மேற்கொள்கிறார். அவரின் பாதயாத்திரை தோல்வியில் முடிந்துள்ளது.
அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி என்பது பொருந்தாத கூட்டணி. கட்சித் தலைவர் என்பதால், கூட்டணியில் இருப்பவர்களையே கடுமையாக விமர்சனம் செய்தால் இது என்ன அரசியல். பா.ஜ.கவில் அண்ணாலை பெரிய தலைவரா? கூட்டணியில் இருக்கும் கட்சியை அண்ணாமலை விமர்சனம் செய்கிறார் என்றால், அவரை அமித் ஷா அல்லது நட்டா கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், எடப்பாடி பழனிசாமியே கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்ந்தால், இந்த கூட்டணியை கிண்டல் கேள்விக்குறி கூட்டணியாகவே மக்கள் பார்ப்பார்கள்” என்றார்
from Tamilnadu News https://ift.tt/cHlCtQD
