தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் காவிரி நீர் விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீதான முதல்வரின் உரைக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, “காவிரி நீர் விவசாயத்துக்கு மட்டுமல்ல, பல மாவட்டங்களுக்கான குடிநீர். இன்று நேற்றல்ல சுமார் 50 ஆண்டுகளாக தொடரும் போராட்டம் இது. 1990-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. 1992-ம் ஆண்டு நடுவர் மன்ற தீர்ப்பு குறித்த நடவடிக்கை எடுக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.

அதைத் தொடர்ந்து மத்திய அரசு, காவிரி கண்காணிப்பு குழுவை அமைத்தது. காவிரி நடுவர் மன்றம் தெரிவித்த தீர்ப்புக்கு மத்திய அரசு தடையாணைப் பெற்றது. அதை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த காலதாமதமானதால், மத்திய அரசு மீது அ.தி.மு.க அரசு வழக்கு தொடர்ந்தது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கும் அளவு காவிரி நீருக்காக குரல் கொடுத்தார்கள். தற்போது எம்.பி-க்கள் போதுமான அழுத்தத்தை அளிக்கவில்லை.
இப்படி பலப் போராட்டத்துக்குப் பிறகு, மத்திய அரசால் காவிரி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது. அதன் படி ஒவ்வொரு ஆண்டும், மாதாந்திர அடிப்படையில், தமிழ்நாட்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் எனத் தெரிவித்தது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், காவிரி நதி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். அது நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர். அதைக் கர்நாடக அரசு திறந்து விடாதது சரியல்ல. இதையும் தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும். இந்தியா கூட்டணி விவாதத்தில் பங்கேற்றப்போது நட்பு அடிப்படையில் காவிரி நீரை கேட்டு இருக்கலாம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் “உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற வார்த்தையை தீர்மானத்தில் இணைக்க வேண்டும்” என்றார் எடப்பாடி. இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தீர்மானத்தில் உள்ளது” என்று பதிலளித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/fEbmDaT
