புதிதாகத் தொடங்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணிக்கும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்.டி.ஏ) முதல் அக்னிப் பரீட்சையாக `தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம்’ ஆகிய மாநிலங்களில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதாகக் கூறப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணி Vs I.N.D.I.A

ஐந்து மாநில தேர்தல், 2024 லோக் சபா தேர்தலுக்கு முன்பாக நடைபெறவிருக்கிறது என்பதால் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஐந்து மாநிலங்களிலும் நவம்பரில் வாக்குப்பதிவு நடத்தி, டிசம்பரில் தேர்தல் முடிவுகளை வெளியிடும் வகையில், அதிகாரபூர்வ தேர்தல் அட்டவணையை வெளியிட்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

தெலங்கானா (ஒரே கட்டமாகத் தேர்தல்):

ஆளுங்கட்சி: பாரத ராஷ்டிர சமிதி

முதல்வர்: கே.சந்திரசேகர ராவ்

சந்திரசேகர ராவ்

மொத்த சட்டமன்றத் தொகுதிகள்: 119

ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள்: 60

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: நவம்பர் 3

வேட்புமனு தாக்கல் முடிவு: நவம்பர் 10

வேட்புமனு பரிசீலனை: நவம்பர் 13

வேட்புமனு திரும்பப்பெறக் கடைசி நாள்: நவம்பர் 15

தேர்தல் வாக்குப் பதிவு: நவம்பர் 30

தேர்தல் முடிவுகள்: டிசம்பர் 3

மத்தியப் பிரதேசம் (ஒரே கட்டமாகத் தேர்தல்):

ஆளுங்கட்சி: பாஜக

முதல்வர்: சிவராஜ் சிங் செளகான்

சிவராஜ் சிங் செளகான்

மொத்த சட்டமன்றத் தொகுதிகள்: 230

ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள்: 116

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: அக்டோபர் 21

வேட்புமனு தாக்கல் முடிவு: அக்டோபர் 30

வேட்புமனு பரிசீலனை: அக்டோபர் 31

வேட்புமனு திரும்பப்பெறக் கடைசி நாள்: நவம்பர் 2

தேர்தல் வாக்குப் பதிவு: நவம்பர் 17

தேர்தல் முடிவுகள்: டிசம்பர் 3

ராஜஸ்தான் (ஒரே கட்டமாகத் தேர்தல்):

முதல்வர்: அசோக் கெலாட்

ஆளுங்கட்சி: காங்கிரஸ்

அசோக் கெலாட், ராகுல் காந்தி, சச்சின் பைலட்

மொத்த சட்டமன்றத் தொகுதிகள்: 200

ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள்: 101

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: அக்டோபர் 30

வேட்புமனு தாக்கல் முடிவு: நவம்பர் 6

வேட்புமனு பரிசீலனை: நவம்பர் 7

வேட்புமனு திரும்பப்பெறக் கடைசி நாள்: நவம்பர் 9

தேர்தல் வாக்குப் பதிவு: நவம்பர் 23

தேர்தல் முடிவுகள்: டிசம்பர் 3

சத்தீஸ்கர் (இரண்டு கட்டமாகத் தேர்தல்):

ஆளுங்கட்சி: காங்கிரஸ்

முதல்வர்: பூபேஷ் பாகெல்

மொத்த சட்டமன்றத் தொகுதிகள்: 90

ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள்: 46

முதற்கட்ட தேர்தல் (20 தொகுதிகள்):

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: அக்டோபர் 13

வேட்புமனு தாக்கல் முடிவு: அக்டோபர் 20

வேட்புமனு பரிசீலனை: அக்டோபர் 21

வேட்புமனு திரும்பப்பெறக் கடைசி நாள்: அக்டோபர் 23

தேர்தல் வாக்குப் பதிவு: நவம்பர் 7

பூபேஷ் பாகெல்

இரண்டாம் கட்ட தேர்தல் (70 தொகுதிகள்):

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: அக்டோபர் 21

வேட்புமனு தாக்கல் முடிவு: அக்டோபர் 30

வேட்புமனு பரிசீலனை: அக்டோபர் 31

வேட்புமனு திரும்பப்பெறக் கடைசி நாள்: நவம்பர் 2

தேர்தல் வாக்குப் பதிவு: நவம்பர் 17

மொத்தமாகத் தேர்தல் முடிவுகள்: டிசம்பர் 3

மிசோரம் (ஒரே கட்டமாகத் தேர்தல்):

ஆளுங்கட்சி: மிசோ தேசிய முன்னணி

முதல்வர்: ஜோரம்தங்கா

மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா

மொத்த சட்டமன்றத் தொகுதிகள்: 40

ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள்: 21

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: அக்டோபர் 13

வேட்புமனு தாக்கல் முடிவு: அக்டோபர் 20

வேட்புமனு பரிசீலனை: அக்டோபர் 21

வேட்புமனு திரும்பப்பெறக் கடைசி நாள்: அக்டோபர் 23

தேர்தல் வாக்குப் பதிவு: நவம்பர் 7

தேர்தல் முடிவுகள்: டிசம்பர் 3

from Tamilnadu News https://ift.tt/X5S61V0