தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான ஜி.கே. வாசன், தனது எம்.பி நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோத்தகிரி அருகில் உள்ள அணையட்டி கிராம மக்களுக்கு சமுதாயக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்துள்ளார். அதன் திறப்பு விழாவில் பங்கேற்ற ஜி.கே வாசனுக்கு படுகர் இன மக்கள் தங்களின் பாரம்பர்ய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், “காவிரி நதிநீர் பங்கீட்டில் மனிதாபிமானமற்ற வகையில் கர்நாடக அரசு நடந்து வருகிறது. காவிரி ஆணையத்தின் வழிகாட்டுதல் படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது தான் எங்களின் குறைந்தபட்ச வேண்டுகோள். அதைக்கூட கொடுக்க மாட்டடோம் என கர்நாடக அரசு தெரிவிப்பது ஒரு போதும் ஏற்புடையதல்ல.
கூட்டணி அரசியல், வாக்கு வங்கி அரசியல், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என இதையெல்லாம் பார்க்காமல், தமிழக முதல்வர் நேரடியாக கர்நாடக முதல்வருடன் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். மத்தியில் தற்போது உருவாகியுள்ள ‘இந்தியா’ கூட்டணி வலுவான அணி இல்லை. இந்திய மக்களுக்கு நம்பிக்கை கொடுக்காதக் கூட்டணி என்று பிரசாரம் செய்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில், இந்தியாவில் வலுவான ஆட்சி அமைவதற்கான சூழல் எதிர் அணியில் இல்லை என்று நாங்கள் பிரசாரம் செய்யும் போது, அதற்கான வலுவான அணி தமிழகத்தில் தேவை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நினைக்கிறது . தேர்தல் நெருங்கும் போது சரியான நேரத்தில் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். அந்த கூட்டணியில் முக்கிய கட்சியாக த.மா.கா இருக்கும். அந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக அமையும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/NADZVwY
