பேருந்து நிறுத்தத்தை மறைத்து வைக்கப்பட்ட பேனர் குறித்தும், அதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் குறித்தும் நேற்றைய தினம் (11-10-2023) நம்முடைய விகடன் டாட்காமில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், உடனடியாக அந்த பேனரை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்!

சென்னை ராமாபுரத்தில் அரசமரம் சந்திப்பு என்பது முக்கியமான பிரதான சாலையாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், இந்தச் சாலையைப் பயன்படுத்திவருகின்றனர். இந்த அரசமர சந்திப்பில் பேருந்து நிறுத்தமும் அமைந்திருக்கிறது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில், பிராட்வேக்குச் செல்லக்கூடிய ஒரு பேருந்து மட்டுமே நின்று, செல்வதாகத் தெரிகிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்தப் பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், நிறுத்தத்துக்கு என்ன பேருந்து வந்து நிற்கிறது என்பதுகூட பயணிகளுக்குத் தெரியாத அளவுக்கு, மிகப்பெரிய பேனர் ஒன்று பேருந்து நிறுத்தத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்தது.

பேருந்து நிறுத்தத்தில் பேனர்

இதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இது தொடர்பாக அந்தப் பேருந்து நிறுத்தத்தை அன்றாடம் பயன்படுத்தி வரும் பயணிகளிடம் பேசியிருந்தோம். அவர்கள், பேருந்து நிறுத்தத்தை மறைத்தபடி வைக்கப்பட்டிருக்கும் பேனரை அகற்றிட வேண்டுமென நம்மிடையே கோரிக்கை வைத்திருந்தனர்.

பேருந்து நிறுத்தத்தில் பேனர்

பயணிகளின் கோரிக்கை குறித்து, விகடன் டாட்காமில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், அரசமரம் சந்திப்பு பேருந்து நிறுத்தத்தை மறைத்தபடி வைக்கப்பட்டிருந்த அந்த பேனரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்றி நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/thu3S5k