பொதுவாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளின்போது நீதிபதிகளை வழக்கறிஞர்கள் `மை லார்ட் (My Lord)’ என்று அழைப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். திரைப்படங்களில்கூட அவ்வாறே கட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

பொதுவாக, நீதிபதிகளை இவ்வாறு அழைப்பது காலனித்துவ கால நினைவுச்சின்னம் என்றும், அடிமைத்தனத்தின் அடையாளம் என்றும் கூறுகிறார்கள். இதனாலேயே, நீதிபதிகளை `மை லார்ட் (My Lord)’, `Your Lordship’ என்று வழக்கறிஞர்கள் யாரும் அழைக்கக் கூடாது என்று 2006-ல் இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனாலும், இன்றும்கூட நீதிமன்றங்களில் இத்தகைய சொல்லாடலை வழக்கறிஞர்கள் ஒரு வழக்கமாகவே பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர், திரும்பத் திரும்ப `மை லார்ட்’ என்று அழைத்ததற்கு, மூத்த நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா தலைமையிலான அமர்வில் இருந்த நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

அதாவது, “எத்தனை முறைதான் மை லார்ட் என்று அழைப்பீர்கள். இவ்வாறு சொல்வதை நீங்கள் நிறுத்திவிட்டால், என்னுடைய சம்பளத்தில் பாதியை உங்களுக்குத் தருகிறேன். அவ்வாறு அழைப்பதற்குப் பதில் நீங்கள் ஏன் `சார்’ என்று அழைக்கக் கூடாது. இல்லையெனில், மூத்த வழக்கறிஞர் எத்தனை முறை `மை லார்ட்’ என அழைத்தார் என்றுதான் அவர் எண்ணிக் கொண்டிருப்பார்” என்று நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
from Tamilnadu News https://ift.tt/klf0grU
