வரும் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெடிபொருள் சட்டத்தின் கீழ், பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதில், ‘விண்ணப்பதாரரின் புகைப்படம், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது டிரைவிங் லைசென்ஸ், லைசென்ஸ் கட்டணம் ரூ. 600 செலுத்தியதற்கான செல்லான், குத்தகை ஆவணம், சுய உறுதி மொழி பத்திரம் ஆகியவற்றை இணைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்” என கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் வியாபாரிகள் பலரும் விண்ணப்பித்தனர். ஆனால் அதில் ஏராளமானோருக்கு ‘லைசன்ஸ்’ இன்னும் கிடைக்கவில்லை. இதற்கு அதிகாரிகளின் குளறுபடிகளே காரணம் என்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேங்கியிருக்கிறது’ என கொதிக்கிறார்கள் வியாபாரிகள்.

தீபாவளி

இதையடுத்து கடந்த 2-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து மனு அளித்த வணிகர் சங்கங்களில் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவிடம் பேசினோம், “இதுவரை பொதுவெளியில், அதாவது தீ பிடிக்காத இடங்களில் பட்டாசு கடை அமைத்திருந்தாலே ‘லைசன்ஸ்’ வழங்கப்படும். அப்போது காவல்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய மூன்று தரப்பில் அனுமதி கடிதம் பெற்றாலே போதும். இந்த ஆண்டு 5 அனுமதி கடிதங்களை பெற வேண்டும் என தமிழக அரசு கூறியிருக்கிறது. இதன்படி கூடுதலாக தாசில்தாரிடமும், தனிநபர் ஒருவரிடமும் வியாபாரிகள் கடிதம் பெற வேண்டும்.

அதற்காக செல்லும் பொழுது, ‘அது இல்லை… இது இல்லை…’ எனக்கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார், அவர்கள். இது வியாபாரிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுக்கிறது. இதேபோல் பட்டாசு கொள்முதல் செய்வோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு என ஒரு ‘லைசன்ஸ்’ வழங்கப்படுகிறது. அதை வைத்துதான் நாங்கள் பட்டாசு கொள்முதலில் ஈடுபடுவோம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்த ஒருமாதத்தில் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு கொள்முதலுக்கு ஆர்டர் கொடுத்துவிடுவோம். அதன் பிறகே சிவகாசி பட்டாசு உற்பத்தி ஆலைகளில் உற்பத்தி தொடங்கும்.

விக்கிரமராஜா

பின்னர் பண்டிகைக்கு 6 மாதங்களுக்கு முன்பு பட்டாசு கொள்முதலை முடித்து விடுவோம். இந்நிலையில் இவ்வாறு கொள்முதல் செய்தவர்களில் பாதி பேருக்குதான் தற்போது விற்பனை செய்வதற்கான ‘லைசன்ஸ்’ வழங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடத்த விபத்துக்களை காரணம் காட்டி அதிகாரிகள் ‘லைசன்ஸ்’ கொடுக்க முரண்டு பிடிக்கிறார்கள். ஆனால் சம்மந்தப்பட்ட இடங்களில் எந்த பிரச்னையும் இல்லை. இதனால் தமிழகம் முழுவதும் ரூ.500 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேங்கியிருக்கிறது.

தலைமை செயலகம்

சுமார் 5,000 வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகாலத்தில் சில்லறை வியாபாரம் நடக்கும் இடங்களில் எந்த விபத்தும் நடக்கவில்லை. விதிமுறைகள் மீறப்படும் உற்பத்தி ஆலைகளில் தான் விபத்து நடக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு ஒருவார காலமே இருக்கும் நிலையில் ‘லைசன்ஸ்’ கொடுப்பதில் ஏற்பட்டிருக்கும் இந்த தடுமாற்றத்தினால் வணிகர்கள் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/B0odSMp