உத்தர பிரதேச அரசு ஹலால் சான்றளிக்கப்பட்ட அனைத்து விதமான பொருட்களுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. எனவே பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில் ஹலால் சான்றிதழுடன் கூடிய உண்ணக்கூடிய பொருட்களின் உற்பத்தி, சேமித்தல், விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றிற்கு உடனடி தடை அமலுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சமூகத்தினர் ஹலால் செய்யப்பட்ட உணவுப்பொருள்களை பயன்படுத்துவது வழக்கம். விலங்குகளை இறைச்சிக்காக வெட்டும் போதும், ஹலால் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. சமீப காலமாக ஹலால் செய்யப்பட்டவை என்ற லேபிள் மற்றும் பேக்கிங்குடன் உணவுப்பொருள்கள் வரத்தொடங்கியது. இது போன்ற உணவுப்பொருள்களுக்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்து இருக்கிறது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹலால் சான்று பெற்ற உணவுப்பொருள்களை தயாரிக்கவோ அல்லது சேமித்து வைத்திருக்கவோ அல்லது விநியோகம் செய்யவோ தடை விதிக்கப்படுகிறது.

பால்பண்ணை பொருள்கள், சர்க்கரை, பேக்கரி பொருள்கள், உணவு எண்ணெணய், பேக்கிங் செய்யப்பட்ட மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், காஸ்மெடிக்ஸ் போன்ற ஹலால் சான்று பெற்ற பொருள்களுக்கு இத்தடை விதிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சான்றிதழ் சட்டம் 89வது பிரிவின் கீழ் ஹலால் தரச்சான்று பெற்ற உணவுப்பொருள்கள் தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. உணவுப்பொருட்களின் தரத்தை சட்டப்பிரிவு 29வது பிரிவின் கீழ் அரசு ஆணையம் தான் முடிவு செய்யும்.
தடையை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், காஸ்மெடிக் பொருட்களின் லேபிள் மற்றும் பேக்கிங்கில் ஹலால் சான்றிதழ் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மருந்து மற்றும் காஸ்மெடிக்ஸ் பொருட்கள் சட்டம் 1940ன் கீழ் ஹலால் சான்றிதழ் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் சில கம்பெனிகள் மற்றும் அமைப்புகள் பொருட்களின் லேபிள்களில் ஹலால் தரச் சான்று பெறப்பட்டது என்று குறிப்பிட்டு மத ரீதியாக விற்பனையை அதிகரிக்க முயன்றதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
ஹலால் சான்றிதழ் பெறாத பொருட்களின் விற்பனையை குறைக்க சதி செய்யும் நோக்கில் ஹலால் சான்று பெறப்பட்டதாக சில அமைப்புகள் உணவுப்பொருள்களின் லேபிள்களில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/Jlwtcn4
