தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவை ஊழல் மிகுந்த அரசியல்வாதி என்று தெரிந்தும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாஜக தவறிவிட்டதாக நடிகையும், அரசியல்வாதியுமான விஜயசாந்தி கடுமையாக சாடியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய விஜயசாந்தி, “பல தலைவர்கள் மீது ED, CBI ரெய்டுகள் மூலம் பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பாஜக-வை பொறுத்தவரை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஊழல் மிகுந்த அரசியல்வாதி என்று தெரிந்தும், பாஜகவும் பிஆர்எஸ்ஸும் இணைந்ததால்தான் கே.சந்திரசேகர் ராவ் மீது பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்குகிறது.

தற்போது பாஜகவின் முக்கிய தலைவர்கள் தெலங்கானாவுக்கு வந்து, கே.சந்திரசேகர் ராவ் ஒரு ஊழல்வாதி, அவரது மகள் மீது மதுபான ஊழல் வழக்கு உள்ளது, குடும்பக் கட்சி என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் திரும்பி டெல்லி செல்வதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. இதனால்தான் பாஜகவை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்திருக்கிறேன்” என விஜயசாந்தி கூறினார்.
மேலும், “சஞ்சய் குமார் என்பவர் கே.சந்திரசேகர் ராவுக்கு எதிராக இருந்ததால் பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்கியது. தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு கட்சி இந்த முடிவை எடுத்தது நியாயமில்லை. சஞ்சய் குமாரை நீக்கியதால் பாஜக சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்கிறது. இதனால் பாஜகவின் பேரழிவிற்கு நாங்கள் பொறுப்பல்ல. எனவே பாஜக கே.சந்திரசேகர் ராவ் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அவரை சிறையில் அடைக்க வேண்டும்” எனவும் விஜயசாந்தி கூறினார்.
விஜயசாந்தி 1997 -ம் ஆண்டு பாஜக-வில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் டிஆர்எஸ் மற்றும் தெலங்கானா இயக்கத்தில் சேர்ந்தார். 2009 ஆம் ஆண்டு அவர் முந்தைய டிஆர்எஸ் கட்சியில் இருந்து எம்பி ஆனார். பின்னர், தெலங்கானா பிரிக்கப்படுவதற்கு முன், 2014 -ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவர் 2019 -ம் ஆண்டு பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் ஆட்சி செய்கிறார் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒரு வருடம் கழித்து, அவர் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்தார். மேலும் தற்போது தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுடன் ஏற்பட்ட பிரச்னையால் பாஜகவில் இருந்து விலகியவர் காங்கிரஸில் இணைந்து, தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மற்றும் திட்டக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/SwlLIj9
