இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியிலான சண்டையில், 1,200 இஸ்ரேலியர்களும் 14,100 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும். எனவே, இந்தப் போரை நிறுத்த வேண்டும் எனச் சர்வதேச நாடுகள் வலியுறுத்தியும் இஸ்ரேல், ஹமாஸை அழிக்காமல் இது நிற்காது என தொடர்ந்து காஸா பகுதியில் வான்வழி, தரை வழித்தாக்குதல்களை தொடர்ந்தது. குறிப்பாக, அகதிகள் முகாம், மருத்துவமனைகள், குடியிருப்புகள் முழுவதும் சிதைக்கப்பட்டன. இதனால், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

காஸா குழந்தைகள்

இந்தப் போர் நிற்காதா என பெருமளவிலான உலக மக்கள் எதிர்பார்த்தனர். இதற்கிடையில், ஹமாஸ் குழுவால் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கும் 240 பேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, பிணைக் கைதிகளின் உறவினர்கள், இஸ்ரேல் அரசிடம்,“உங்கள் எதிரிகளை பிறகு அழித்துக்கொள்ளுங்கள். எங்களின் அன்புக்குரியவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை முன்னெடுங்கள்” என அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்தப் போர் நிறுத்தத்துக்கு கத்தார் தொடர்ந்து இருநாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, 4 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் “குறைந்தது 50 இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டுப் பிணைக்கைதிகள்(பெண்கள் மற்றும் குழந்தைகள்) விடுவிக்கப்படுவார்கள். கூடுதலாக விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளுக்கும்,

பாலஸ்தீன ஆதரவு போராட்டம் – பிரிட்டன்

கூடுதல் ஒருநாள் போர்நிறுத்தம் இருக்கும். மேலும், இஸ்ரேல் சிறையிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 300 பாலத்தீனர்கள் விடுக்கப்படுவார்கள்” என்ற ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரவு முழுவதும் நடந்த அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு “கடினமான முடிவு, ஆனால் இது சரியான முடிவு” என இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஹமாஸ் போராளிக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,”இந்த மனிதாபிமான போர்நிறுத்தத்தை வரவேற்கிறோம். இது இஸ்ரேலிய சிறைகளிலிருந்து 150 – 300 பாலஸ்தீனியர்களையும் விடுவிக்கும். காஸா வாசிகளுக்கு இந்த போர் நிறுத்தம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவையின் ஒப்புதல்தான் கடைசி முட்டுக்கட்டையாக இருக்கிறது.

பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேலின் எதிர்கட்சியினர்,”இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் மீது மிக மோசமான தாக்குதலை நடத்திய ஹமாஸ் குழுவுக்கு அதிக இடம் கொடுத்தது போலாகும்” என விமர்சித்திருக்கின்றனர். இதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தரப்பில், “இந்த இக்கட்டான சூழல் முடிந்தவுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழு பலத்துடன் தொடரும். நெத்தன்யாகுவின் போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு போரின் முடிவைக் குறிக்கவில்லை. கடத்தப்பட்ட அனைவரையும் திரும்ப அழைத்து வந்துவிட்டால், ஹமாஸை ஒழிக்க இஸ்ரேல் அரசுக்கு எந்த அச்சுறுத்தலும், கட்டுப்பாடும் இருக்காது. எனவே, இஸ்ரேலிய அரசும், இராணுவமும், பாதுகாப்புப் படைகளும் போரைத் தொடரும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/wyqWuRD