AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவில் வேறொருவரின் முகத்தைப் பொருத்தி, உண்மையான வீடியோவைப்போலவே உருவாக்குகிறார்கள். அந்தப் போலியான வீடியோக்களைப் பலரும் உண்மை என நம்பி பரப்பிவருகின்றனர். சமீபத்தில் `Deepfake’ தொழில்நுட்பம் மூலம், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோல் உள்ளிட்டோரின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டுப் பரப்பப்பட்டன. நாட்டின் பிரதமர் மோடியே பாடல் பாடுவதுபோலவும், ஆடுவதுபோலவும் வீடியோக்கள், ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன.

பிரதமர் மோடி -தொழிலதிபர் விகாஸ் மஹந்தே

இது குறித்து பிரதமர் மோடியே, “சமீபகாலமாக `Deepfake’ வீடியோக்கள் அதிகம் உருவாக்கப்பட்டு, பகிரப்படுவது பெரும் கவலையளிக்கிறது. நான் ஒரு கர்பா பாடலைப் பாடுவது போன்ற வீடியோவைப் பார்த்தேன். இது போன்ற பல வீடியோக்கள் ஆன்லைனில் இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு காலத்தில், தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம்” என வேதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி கர்பா நடனம் ஆடும் வீடியோ Deepfake கிடையாது. அது உண்மை எனத் தொழிலதிபர் விகாஸ் மஹந்தே தெரிவித்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் மோடி போலவே லுக்-அலைக்காக (Look-a-like) இருப்பவர் தான் தொழிலதிபர் தான் விகாஸ் மஹந்தே. இவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில்,”பிரதமர் மோடி சமீபத்திய டீப்ஃபேக் பிரச்சினை குறித்துப் பேசினார். அவரது முகம் போலவே வீடியோ வெளியாகியிருப்பதாகவும் வருத்தப்பட்டார். அந்த வைரலான வீடியோவில் இருப்பவர் பிரதமர் மோடியல்ல. நான் தான் பிரதமர் மோடி போல வேடமிட்டிருந்தேன். இதை எந்த விதத்திலும் பிரதமர் என்றோ ஆள்மாறாட்டம் செய்தேன் என்றோ கூற முடியாது.

தொழிலதிபர் விகாஸ் மஹந்தே

ஒரு கலைஞராகவும், நடிகராகவும், நமது பிரதமரின் உடல் தோற்றத்திற்காகப் பல நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுகிறேன். இதை நான் விரும்பி செய்கிறேன். ஆனால் எந்த வகையிலும் நான் தான் மோடி எனக் கூறவில்லை. இந்தியப் பிரதமர் என்ற அவரது புகழைக் கெடுக்கும் எதையும் நான் செய்யவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். அவரை நேசிக்கும் மற்றும் மதிக்கும் மக்களிடையே அவருடைய சித்தாந்தங்களைப் பகிர்ந்துகொள்வது எனது மரியாதையாக நம்புகிறேன் எதிர்காலத்திலும் அதைத் தொடர்வேன் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/Pb5DNwV