தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான மோதல் உச்சத்தை எட்டி உச்ச நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. இந்நிலையில் பிரச்னைகளை `சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்` என்றிருக்கிறார் தமிழிசை செளந்தரராஜன். தெலங்கானா ஆளுநரின் இந்த ஐடியா வெர்க் அவுட் ஆகுமா… எந்த அர்த்தத்தில் இதனை குறிப்பிட்டார் என விரிவாக விசாரித்தோம்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்கும் மசோதக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுகிறார் என வாதத்துடன் உச்ச நீதிமன்றத்தை நவம்பர் 10-ம் தேதி நாடியது தமிழக அரசு. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர்கள் செயல் வருத்தமளிக்கிறதென சொல்லவே, சில மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆர்.என் ரவி. பதிலுக்கு தமிழ்நாடு அரசும் சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி மசோதாக்களை மீண்டும் அனுப்பிவைத்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் ஆரோக்கியமான போக்கு இருக்க வேண்டும், இருதரப்பும் உட்கார்ந்து பேச வேண்டும், குறிப்பாக முதலமைச்சரும் தமிழ்நாடு ஆளுநரும் நேரடியாகப் பேசி தீர்வு காண வேண்டும்” என்றார்.
தெலங்கானா ஆளுநரின் இக்கருத்துக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மனோ தங்கராஜ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஜனநாயக கடைமைகள் நிறைவேற்ற மறுக்கும் ஆளுநரிடம் என்னவென பேச்சுவர்த்தை நடத்துவது. இதென்ன குடும்ப பிரச்னையா.. சொத்து பிரச்னையா… என கடுமையான கேள்விகளை ஆளுநர் தமிழிசை நோக்கி எழுப்பினர்.

நம்மிடன் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “இதில் பேச்சுவார்த்தை நடத்த என்ன இருக்கிறது? மசோதாவை தயாரித்து அனுப்புவதும் அதனை ஆளுநர் ஒப்புதல் தருவதும், அதன்மீது நடவடிக்கை எடுப்பதும்தானே மரபு.
அரசியலைமைப்பின்படி செயல்பட மறுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவி, அவரின் எஜமானர்களாக மோடி, அமித் ஷாவின் சொல்வதை செய்கிறார். இப்படி வேண்மென்றே உள்நோக்கத்துடன் செயல்படும் ஆளுநரிடம் என்னவென பேச்சுவார்த்தை நடத்துவது. இந்த கருத்தை சொல்லும் ஆளுநர் தமிழிசை முதலில் அவர் ஆளுநராக இருக்கும் தெலங்கானா மாநிலத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தட்டும். தமிழ்நாடு ஆளுநர் இங்கே செய்வதைபோல தெலங்கானா மாநில அரசை செயல்படவிடாமல் தடுக்கிறார், எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இதைத்தான் செய்கிறார்கள்” என்றார் கொதிப்புடன்,
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரன் “ஆளுநர் தமிழிசை பேசுவது அர்த்தமற்றது. அவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பதால் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார். அப்படினால் பேசினால் மட்டும் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடுமா என்றால் அதற்கும் வாய்ப்பேயில்லை” என்றார்

இதுகுறித்து கமலாலய வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம் “தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சொல்வதில் என்ன தவறு? தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஆரோக்கிய சூழல் நிலவிடும் எண்ணத்தில் இப்படி பேசியிருக்கிறார். இதையும் தி.மு.க-வினர் விமர்சிக்கிறார்கள் என்றால் ஆளுநர் பிரச்னை முடிவுக்கு வரக்கூடாது, ஆளுநரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார்களோ என்ற சந்தேகம் கிளம்புகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு அனுப்பும் அத்தனை மசோதாக்களையும் திருப்பி அனுப்புவதுபோல் பேசுகிறார்கள், ஆனால் உண்மையில் 100-ல் 10 மசோதாதான் திருப்பி அனுப்பப்படுகிறது. ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என்கிறார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தினால்கூட தரம்தாழ்ந்து விமர்சிக்கிறார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/1vjxPGV
