இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. போரில் இஸ்ரேலியர்கள் 1,000க்கு மேற்பட்டோரும், பாலஸ்தீனியர்கள் 14,000- க்கு மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் 240 பேர் பிணைக் கைதிகளாக பாலஸ்தீனத்திற்கு நாடுகடத்தப்பட்டனர். பாலஸ்தீனியர்கள் பலரும் இஸ்ரேலிய ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியை நோக்கியே சென்றது. போர் தொடங்கி ஏழு வாரங்கள் கடந்த நிலையிலும் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது போல் தாக்குதலை தீவிரப்படுத்தப்பட்டே வந்தது.

இந்நிலையில், பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு பிணைக் கைதிகளையும், கைதிகளையும் விடுவிக்க தற்காலிகமாக போரை நிறுத்துவது என்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். ஒப்பந்தத்தின்படி நேற்று (நவம்பர் 24) முதல் போர் நிறுத்தம் தொடங்கியது.

“ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேலியர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கினார்களா, அவர்களுக்கான மருத்துவ தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதா என்பது குறித்த தெரியவில்லை. அவர்கள் எந்த நிலையிலும் விடுவிக்கப்படலாம். அவ்வாறு விடுவிக்கப்படும் பிணைக் கைதிகளின் உடல்நிலையை பாதுகாப்பது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கி பராமரிப்பது என்பதையே, குறிக்கோளாக கொண்டுள்ளோம்” என இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

குழந்தைகளுக்கான ஏற்பாடுகள்

இது தொடர்பாக பிணைக் கைதிகள் சிகிச்சை மேற்கொள்ளவதற்காக மருத்துவமனைகள். அவர்களுக்கான உணவு பட்டியல் என வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளது இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம். அதன்படி இஸ்ரேலின் ஷினிடர் குழந்தைகள் மருத்துவ மையம், விடுவிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையை மேற்கொண்டு அவர்களை பராமரிக்கும்.

https://platform.twitter.com/widgets.js

இச்சிலோவ், வொல்ப்சன், ஷெபா, சொரோகா மருத்துவமனைகள் பெரியவர்களுக்கான சிகிச்சையை மேற்கொண்டு அவர்களை பராமரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு காஸா பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டவுடன், அவர்கள் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளை அடைவதற்குள் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கவும் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 120 மில்லி அளவு கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த டானிக்குகள் வழங்கப்படும். மீதமுள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தேவையான தண்ணீர், சுகர் லெஸ் ஆப்பிள் சாஸ், இனிப்பு பிஸ்கட், தேநீர் போன்றவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தின்படி பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். அதன் பின்னர் கைதிகளாக உள்ள பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/g4jHxwQ