இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7-ம் தேதி முதல் நடந்து வந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உலக நாடுகள் இந்தப் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தன. இதற்கிடையில், இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியிலான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கத்தார் நாடு இரு தரப்பிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில், நான்கு நாள்கள் போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் பேரில், 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸும், 150 பாலஸ்தீன சிறைவாசிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.
היום בסיור בעזה: נמשיך עד הסוף – עד לניצחון. pic.twitter.com/e2aEA7Gfa4
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) November 26, 2023
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், மூன்று கட்டங்களாக மொத்தம் 58 பிணைக் கைதிகளை ஹமாஸும், 78 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேலும் விடுவித்திருக்கிறது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடையும் நிலையில், கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று காஸா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் இராணுவப் படையினரைச் சந்தித்ததாக அவரின் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
அப்போது இராணுவப் படையிடம், “நமது போரின் இலக்கை அடைவதற்கான சக்தியும், ஆற்றலும், விருப்பமும், உறுதியும் நம்மிடம் இருக்கிறது. எதுவும் நம்மைத் தடுக்க முடியாது. இதை நாம் உறுதியாக நம்பவேண்டும். இறுதி வரை, வெற்றி பெறும்வரை தொடர்வோம். நமது போரின் இலக்கு மூன்று விஷயங்கள் தான். ஹமாஸை ஒழிக்க வேண்டும். நமது பிணைக்கைதிகள் அனைவரையும் மீட்க வேண்டும். காஸா மீண்டும் இஸ்ரேல் அரசுக்கு அச்சுறுத்தலாக மாறாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/CPTqI4b
