பா.ஜ.க கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமராகப் பதவியேற்ற மோடி, அந்த ஆண்டு முதல் மாதம் ஒருமுறை அகில இந்திய வானொலியில், மன் கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி வாயிலாக மக்களிடம் உரையாற்றிவருகிறார். அந்த வகையில் நேற்று மன் கி பாத் நிகழ்ச்சியில், திருமணத்தை வெளிநாடுகளில் நடத்துவதை தவிர்க்குமாறும், திருமண ஷாப்பிங்கில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குமாறும் மக்களிடம் மோடி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மோடி தன்னுடைய முழுமையான உரையில், “தற்போது திருமண சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த திருமண சீசனில் சுமார் ரூ.5 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கும் என சில வர்த்தக நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. எனவே, திருமணங்களுக்கு ஷாப்பிங் செய்யும் போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதேபோல், திருமணம் எனும்போது, நீண்ட நாள்களாக ஒரு விஷயம் என்னைத் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது.
நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள்… சமீப நாள்களாகவே சில குடும்பங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று திருமணங்கள் நடத்துவதால் புதிய சூழல் உருவாகிறது. இது அவசியம் தானா… சொந்த நாட்டிலேயே இதுபோன்ற திருமண விழாக்களை ஏன் நடத்தக்கூடாது… நீங்கள் விரும்பும் அமைப்புகள் வேண்டுமானால் இங்கு இல்லாமலிருக்கலாம். ஆனால், இதுபோன்ற நிகழ்வுகளை நாம் இங்கேயே ஏற்பாடு செய்யும்போது, அதற்கான அமைப்புகள் இங்கு வளரும்… இது மிகப்பெரிய குடும்பங்களுடன் தொடர்புடையது. இது அவர்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன். இன்று, நாட்டின் 140 கோடி மக்களால் இங்கு பல மாற்றங்கள் நடைபெறுவது தெளிவாகத் தெரிகிறது. அவற்றை இந்தப் பண்டிகைக் காலங்களில் நாம் பார்த்தோம்.

கடந்த சில நாள்களில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களில் ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்திருக்கிறது. இந்த நாள்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குவதில் மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது. இப்போது, குழந்தைகள்கூட கடையில் எதாவது பொருள்களை வாங்கும்போது அதில் `மேட் இன் இந்தியா’ என்று இருக்கிறதா பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், ஆன்லைலைனில் பொருள்களை வாங்கும்போதுகூட, இது நம் நாட்டில் தயாரிக்கப்பட்டதா என்று பார்க்க மக்கள் பார்க்காமலிருப்பதில்லை. `Vocal For Local’ என்ற இந்த பிரசாரம் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது” என்று பேசியிருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/Piuwh63
