தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இல்லை எனவும், 14 நாள்கள் தொடர் சிகிச்சை வேண்டுமெனவும் மருத்துவ அறிக்கை வெளியாகியிருக்கிறது. உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்துக்கொண்டு, அவ்வப்போது மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவந்த விஜயகாந்த், நவம்பர் 18-ம் தேதியன்று காய்ச்சல், காரணமாக சென்னை மியாட் (MIOT) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்

தே.மு.தி.க தரப்பிலும், ஓரிரு நாள்களில் வீடுதிரும்புவார் என்றும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நவம்பர் 23-ம் தேதியன்று, `விஜயகாந்த்தின் உடல்நிலை சீராகவும், உடல் செயல்பாடுகள் நிலையாகவும் இருக்கிறது. இன்னும் சில நாள்கள் கண்காணிப்புக்குப் பிறகு வீடுதிரும்பி வழக்கமான நடவடிக்கையை அவர் ஏற்றுக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என மியாட் மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், `விஜயகாந்த்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

மருத்துவமனை அறிக்கை

எனினும் கடந்த 24 மணிநேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாள்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/pgIRTH0