சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தொடர்பான பிரச்னை கடந்த சில தினங்களாக அனைத்து ஊடகங்களிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதில், ஒன்றாக நேற்று மாலை மாடர்ன் தியேட்டர்ஸ் நிலத்தின் தற்போதைய உரிமையாளர் விஜயவர்மா அவரது தரப்பில் உள்ள கோரிக்கைகளை பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் தமிழக முதல்வருக்கு தெரிவித்திருந்தார். இதில், மாவட்ட ஆட்சியர் தனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருந்தார்.

அதன்மூலம் நேற்று மாலை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவு தொடர்பாக சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் பராமரிப்பு கோட்ட பொறியாளர் துரை வெளியிட்ட அறிக்கையில், “சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம், அந்த நிறுவன பங்குதாரர்களால் 1994-ல் குமாரசாமி உட்பட 10 பேருக்கு விற்கப்பட்டது. கிரயம் பெற்றவர்களால் நிலமானது மனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. மனை பிரிவுகளில் இருந்து பொன்னுசாமி வர்மா மகன் ரவி வர்மா 2004 இல் இரண்டு ஏக்கர் இடத்தை கிரயம் பெற்றுள்ளார். விஜயவர்மன் இந்த வீட்டு மனை பிரிவில் 1348 சதுர அடி நிலத்தை தந்தை ரவிவர்மாவிடமிருந்து 2023 மார்ச் ஒன்பதில் தான செட்டில்மெண்ட் பெற்றுள்ளார். அந்த இடம் மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவை ஒட்டி கிழக்கு புறம் உள்ளது. அதன் வளைவு கன்னங்குறிச்சி கிராமம் சாலை புறம்போக்கில் அமைந்துள்ளது. இந்த இடம் ஏற்காடு சாலையில் உள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான புல எண் எட்டில் விஜயவர்மன் அவரது நிலத்துக்கு பாதை அமைக்கும்படி ஆக்கிரமித்துள்ளார். ஏற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்ய பணி நடந்து வருகிறது
நெடுஞ்சாலை நில எல்லைகளை நிர்ணயம் செய்ய வருவாய் நெடுஞ்சாலை அலுவலர்களால் கடந்த 2-ம் தேதி தணிக்கை செய்யப்பட்டது. அதில், மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவுக்கு பின் பக்கத்தில் வடபுறம் 1.05 மீட்டர், தென்புறம் 0.30 மீட்டர் இருந்தது. இதனால் வருவாய்த்துறை ஆவணப்படி அரசு நிலத்தை வரையறுக்க நெடுஞ்சாலை எல்லையில், கடந்த நாளில் விஜயவர்மன் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாதபடி எல்லை கற்கள் அமைக்கப்பட்டன. அவரின் பட்டா நிலம் அளக்கப்படவில்லை. சாலை புறம்போக்கை வரையறை செய்து எல்லை கற்கள் அமைக்கப்பட்டன. இதில், அந்த வளைவு உள்ள இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானதாக உள்ளது உறுதியானது.

இந்த நிலையில் விஜயவர்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் விதிகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்து வழக்கு முடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடம் அரசுக்கு சொந்தமானது வேறு யாரும் உரிமை கூற முடியாது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/8Bb7vpo
