உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 -ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாகூர் தர்கா-வுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வருகை புரிந்தார். கவர்னர் வருகையால் அலங்கார வாசல் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுற்றிலுள்ள ஒருசில கடைகள் அடைக்கப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட எல்லையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், திக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஆளுநர் வருகைக்கு முன்பாகவே காவல்துறையினர் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து தர்கா வந்தடைந்த கவர்னருக்கு பாரம்பரிய முறைப்படி தர்கா மணி மேடையில் அமர்ந்திருந்தபடி நகரா மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவியை அலங்கார வாசலில் நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் ஹாஜி உசேன் சாஹிப் , ஆலோசனை குழு உறுப்பினர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் , நாகை எஸ்பி ஹர்ஷிங் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் தர்காவினுள் சென்ற ஆளுநர் ரவி, பெரிய ஆண்டவர் சமாதியில் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா ஓதப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார். பின்னர் தர்கா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், ”467 வது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாசாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழைமை வாய்ந்த இந்த தர்கா பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று எழுதினார்.

இது தொடர்பான ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவில், “ஆளுநர் அவர்கள், நாகூர் தர்காவின் விசேஷமிக்க சந்தனக்கூடு வருடாந்திர கந்தூரி திருவிழாவில் பங்கேற்று, தமிழ்நாட்டின் குறிப்பாக தென் மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நமது மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/hl6USQo
