வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு `அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் கூட்டம்’ என்ற பெயரில், முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார். நீலகிரி மாவட்டத்திற்கு இன்று வருகைத் தந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு கோத்தகிரி பகுதியில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். படுகர் மக்களின் உடையில் அந்த மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.

ஓ.பி.எஸ்

மேலும், படுகர் இன மக்களின் குலதெய்வமான பேரணியில் உள்ள ஹெத்தையம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து ஊட்டியில் நடைபெற்ற நிர்வகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ‌‌.பன்னீர்செல்வம், “எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழகத்தின் அடிப்படை விதிகளை எடப்பாடி பழனிசாமி தகர்த்திருக்கிறார்.

தொண்டர்களுக்காக உருவாக்கிய இந்தக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி போன்ற மிட்டா மிராசுகள்தான் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார். பண பலத்தால் அ.தி.மு.க-வை கபளீகரம் செய்துவிட்டார். உரிமை மீட்புக் குழுவில் நிர்வாகிகளை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஓ.பி.எஸ்

சில இடங்கள் காலியாக இருக்கின்றன. அவையும் விரைவில் நிரப்பப்படும். எந்தத் தேர்தல் வந்தாலும் எங்களை வெற்றிப்பெற யாருக்கும் திராணி கிடையாது. கொடநாடு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக இருக்கிறார்கள்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/9XeKonZ