“கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகையில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் கன்னட மொழி இடம் பெற வேண்டும். பிப்ரவரி 28-ம் தேதிக்குள் இந்த விதிகளுக்குக் கட்டுப்படாத கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமங்கள் நிறுத்தி வைக்கப்படும்” என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பான கர்நாடக ரக்ஷன வேதிக் அமைப்பு, பெங்களூரில் உள்ள அனைத்து கடைகளின் பெயர்ப் பலகைகளிலும், `விரைவில் 60 சதவிகித கன்னடம் இடம்பெற வேண்டும்’ என்று கோரி, வன்முறைப் போராட்டங்களை நடத்தியது.

சில கன்னட மொழி ஆர்வலர்கள் ஆங்கிலப் பலகைகளை உடைத்தும், ஆங்கில எழுத்துகளில் கறுப்பு மையைப் பூசியும், வணிக நிறுவனங்களுக்குள் நுழைந்து ஆங்கிலப் பலகைகளைக் கிழித்தும் எறிந்தனர். அதைத் தொடர்ந்து, காவல்துறை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து தலையிட்டதால், வன்முறை கலவரம் தடுத்து நிறுத்தப்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சில இடங்களில் தடியடி நடத்தி போராட்டக்காரர்கள் சிலர், கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
from Tamilnadu News https://ift.tt/IMNwSm0
