பா.ஜ.க-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருப்பவர் ஜெகதீஸ்வரி. தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி கவிதா. இருவருக்கும் கட்சிரீதியாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இருவருக்குமான புகைச்சல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி ஆறு பேரை அழைத்துக்கொண்டு, ஜெகதீஸ்வரின் வீட்டுக்கு கவிதா சென்றிருக்கிறார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கவிதா, ஜெகதீஸ்வரி தலையில் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் ஜெகதீஸ்வரியின் தலையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அத்துடன் கவிதா தன்னை தாக்கியதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக கவிதா உள்ளிட்ட ஐந்து பேர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருப்பதுடன், தலைமறைவாக இருக்கும் கவிதாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பா.ஜ.க வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஜெகதீஸ்வரியிடம் பேசினோம். “நான் படித்திருக்கிறேன், முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். படிக்காத கவிதா நான் படித்ததை வெளியில் சொல்லக் கூடாது என்றும், அதிகம் படித்துவிட்டதால் ஆடம்பரம் செய்கிறேன் என்றும் அடிக்கடி சொல்வார். என்னை பற்றி தவறாக புரிந்து0கொண்ட கவிதா என்மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்து வந்தார். கட்சி நிகழ்ச்சிகளில் என்னை மேடையில் உட்காருவதற்கு அனுமதிக்க மாட்டார். நிகழ்ச்சிகளில் என்னை கலந்துகொள்ளக் கூடாது என்பார். நான் அவருடன் எந்த மோதலும் வைத்து கொண்டதில்லை. அவர் போன் நம்பர்கூட என்னிடம் இல்லை.

இந்நிலையில் என் வீட்டுக்கு வந்த அவர், குக்கர் மூடியால் என் தலையில் பலமாக அடித்துவிட்டார். இதில் எனக்கு பத்து தையல்கள் போடப்பட்டது. இது தொடர்பாக நான் வன்கொடுமை தடுப்புச் சடத்தின்கீழ் புகார் அளித்திருக்கிறேன். சாதிய அடக்குமுறைதான் இந்த தாக்குதலுக்குக் காரணம். கடந்த 14-ம் தேதி வழக்கு பதிவுசெய்த போலீஸார், கவிதாவைத் தேடி வருகின்றனர். கவிதா மீது வழக்குகளும் உள்ளன. தலைமறைவாக இருக்கும் கவிதாவிற்கு கட்சியை சேர்ந்த சிலரே அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வருகின்றனர்” என்றார்.
இது தொடர்பாக கவிதாவின் கருத்தை கேட்பதற்கு அவருக்கு போன் செய்தோம். அவர் செல் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், பா.ஜ.க-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதிஷ், கட்சிக்குக் களங்கும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கவிதாவை தெற்கு மாவட்ட தலைவி பொறுப்பிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/pA1fR3e
