மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் நேற்று தாக்கல்செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட்மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி-யும், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் தம்பியுமான டி.கே.சுரேஷ், “பட்ஜெட்டில் தென்னிந்தியாவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவுக்குச் சேர வேண்டிய நிதி, வட இந்தியாவிற்கு விநியோகிக்கப்படுகிறது. இந்தி பேசும் வட மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் எனப் பிரித்துப் பார்க்கப்படுகிறது.

எம்.பி டி.கே.சுரேஷ் – டி.கே.சிவக்குமார்

மத்திய அரசிடமிருந்து கர்நாடகாவுக்கு போதிய நிதி கிடைக்கவில்லை. எனவே, `தென்னிந்தியா’ என்ற தனி நாடு கோரிக்கை விடுப்பதைத் தவிர, தென்னிந்தியர்களுக்கு வேறு வழியில்லை” என்று தனி நாடு கோரிக்கையை முன்வைத்தார். உடனடியாக பா.ஜ.க தரப்பிலிருந்து இதனை எதிர்த்த பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, நாட்டை பிரித்து ஆள வேண்டும் என்பது காங்கிரஸின் யோசனை என்றும், `காங்கிரஸ் முக்தபாரத் – காங்கிரஸ் இல்லாத நாட்டை உறுதி செய்வோம்’ என்றும் தெரிவித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து, டி.கே.சுரேஷின் பேச்சுக்கு விளக்கமளித்த டி.கே.சிவகுமார், தென்னிந்திய மக்கள் புறக்கணிக்கப்படுவதால், தனது சகோதரர் மக்களின் கருத்தை வெளிப்படுத்தியாகவும், ஆனாலும் நாடு ஒன்றுதான் என்றும் கூறினார். இந்த நிலையில், நாட்டைப் பிரிப்பதாக யார் பேசினாலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார்.

மல்லிகார்ஜுன கார்கே

மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாட்டை யாராவது பிரிப்பதாகப் பேசினால், அவர்கள் எந்தக் கட்சியினரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒருபோதும் நாங்கள் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் நாம் அனைவரும் ஒன்றுதான். ஒற்றுமையாகவே இருப்போம்” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/782xmwX