தமிழ் திரைப்பட நடிகர் விஜய் நேரடியாக அரசியலில் இறங்கப்போவதாகத் தொடர்ச்சியாகப் பேச்சுகள் வந்துகொண்டே இருந்தன. அதிலும், கடந்த ஆண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் பரிசுத் தொகை அளித்த பிறகு, கிட்டத்தட்ட அந்தச் செய்திகள் உறுதியாகின.

அதன் பின்னர், விஜய் மக்கள் இயக்கத்தில் தனித்தனியாக வழக்கறிஞர் பிரிவு, மகளிரணி என அடுத்தடுத்த வேலைகளை புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டுவந்தார். சமீபத்தில்கூட, VVIP-களிடம் விஜய் சந்தித்துப் பேசியதாகவும், கட்சிப் பெயர் குறித்து மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் கசிந்தன.
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr
— Vijay (@actorvijay) February 2, 2024
இப்படியிருக்க, இன்று காலை முதல், விஜய் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சியின் பெயர் அல்லது அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. விஜய் மக்கள் இயக்கத்தின் புஸ்ஸி ஆனந்த் இன்று மதியம் டெல்லியில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு சென்றதும், அந்த தகவல்கள் உறுதியாகின.
இந்த நிலையில், நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்திருக்கிறார். `தமிழக வெற்றி கழகம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் கட்சி குறித்து, நடிகர் விஜய் விரிவான அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். ட்விட்டரில், TVK_Vijay என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
from Tamilnadu News https://ift.tt/rF9Z6wL
