புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங், திருமயம் அருகே உள்ள ஓச்சம்பட்டியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார். பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கீரமங்கலத்தில் நடைபெற்ற பா.ஜ.கவின் சாதனை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பேசும்போது, “மத்திய பா.ஜ.க அரசு, எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத அரசாக இருந்து வருகிறது. 2014-க்கு முன்பாக காங்கிரஸ் கூட்டணியில் அங்கமாக இருந்த தி.மு.க அரசாங்கத்தில் அத்தனை ஊழல்கள் நடந்திருக்கிறது. ஆளும்கட்சியாக இருக்கும் தி.மு.க குடும்ப கட்சி. குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கட்சி. பா.ஜ.க வெளிப்படையான கட்சி. மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் கட்சி.

உலகிலேயே சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தும் முதன்மை நாடாக இந்தியா உள்ளது. தொழில்நுட்பத்திலும் வளர்ந்துள்ளது.

மத்திய அரசு வரியில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. எங்கள் வரிப்பணம் என்னாச்சு என்று என்று மாநில அரசிடம் கேளுங்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனா நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்களை இழந்தோம். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 100 சீன வீரர்களை வீழ்த்தினோம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீரையும் அதிகளவு உறிஞ்சி வளரும் தைலமரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், “பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். இத்திட்டத்தில் மோசடி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. இத்திட்டத்தை பொறுத்த வரையில் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் விமான முனையம் கட்டுமான பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.

மத்திய அமைச்சர் வி.கே.சிங்

தேசிய நெடுஞ்சாலை அமைக்குமாறு மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவதில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கி சாலைகளை மத்திய அரசே அமைத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன.” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/YTDjN1y