பீகார் மாநில கல்வித்துறை ஊழியர்கள், அலுவலகத்தில் ஜீன்ஸ் மற்றும் டி- ஷர்ட் போன்ற உடைகளை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பீகார் அரசு, 2019-ல் மாநில தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி -ஷர்ட் அணிவதைத் தடை செய்திருந்தது. தற்போது, கல்வித்துறை ஊழியர்கள் அலுவலகத்தில் ஜீன்ஸ் மற்றும் டி- ஷர்ட் போன்ற உடைகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பீகார் மாநில கல்வித்துறை நிர்வாகம் புதன்கிழமையன்று வெளியிட்டுள்ள உத்தரவில், `அலுவலக கலாசாரத்திற்கு முரணான உடையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவது கவனிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் அதிகாரிகள் அல்லது மற்ற பணியாளர்கள் டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் போன்ற (casuals) உடைகள் அணிவது அலுவலக பணி கலாசாரத்திற்கு எதிரானது.
எனவே, அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கல்வித் துறை அலுவலகங்களுக்கு ஃபார்மல் உடையில் மட்டுமே வர வேண்டும். கல்வித்துறை அலுவலகங்களில் ஜீன்ஸ், டி-ஷர்ட்டுகள் போன்றவை அணிந்து வரக்கூடாது என்ற உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பீகார் அரசின் இந்த அறிவிப்பு, மக்களிடையே கவனம் பெற்றதோடு, சமூக வலைதளங்களில் முரணான கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன.
உடை அணிவதற்கு இத்தகைய தடை விதிக்கப்படுவது குறித்து உங்களின் கருத்து என்ன?
from Tamilnadu News https://ift.tt/ALsSyuD
