இந்தியாவை பொறுத்தவரை பாலினம் மற்றும் பாலியல் கல்வியில் மிகவும் பின்தங்கி உள்ளது. இந்தியா, பாலியல் வறட்சியும் கட்டாய வல்லுறவு அதிகமுள்ள நாடாகவும் உள்ளது. சட்டமே குற்றமாக வரையறுத்த குழந்தைத் திருமணம், இன்றும் வட மாநிலங்களில் நடந்து வருகிறது. அதே நேரத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வும் இன்றைய நாளில் சாதாரணமாக நடந்தேறுகிறது.
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. 15 வயது சிறுமியை 25 வயது ஆண் பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்தச் சிறுமி, இருவரின் விருப்பத்துடன் உடலுறவு நடந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ், சம்மதத்துடன் நடந்த உறவு குற்றமாகாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண்ணின் திருமண வயதை 21- ஆக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்கும் நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இதற்குப் பின் இருக்கக்கூடிய காரணிகளை ஆராய வேண்டும். 18 வயதுக்கு கீழே உள்ளவர்களின் உடலும் மனமும் உடலுறவுக்கு தகுதி பெற்றதாக இருக்குமா என்று, சென்னை கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மீனாவிடம் கேட்டோம்…
அவர், “பெண் குழந்தைகள் சுமார் 12 முதல் 14 வயதுக்குள் பருவமடைகின்றனர். பருவமடைந்த ஆரம்ப காலகட்டத்தில் அவர்களின் கருப்பை சிறியதாகவும் கருவைச் சுமக்க இயலாததாகவும் இருக்கும். எனவே 13 முதல் 20 வயது வரையிலான மகப்பேறு என்பது, பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது. இந்தப் பருவத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு மேற்கொண்டால் கரு உருவாகலாம். இதனால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உயிருக்கு ஆபத்து வரலாம்.
ஆனால், பதின் பருவத்தில் ஏற்படும் காம உணர்வு இயல்பானது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பதின் பருவத்தில் ஏற்படும் பாலியல் உணர்வை முறையாகக் கையாள்வது குறித்து, சமூகத்தில் பாலியல் கல்வி இல்லாதது தான் இங்கு மிகப்பெரிய சிக்கல்.

பதின் பருவத்தினருக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களை வெளிப்படையாகப் பேச வேண்டும். அதன் மூலம் பாலியல் உணர்வை முறையாக கையாள்வதற்கான வழிகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். பாலியல் உணர்வை சுய இன்பத்தின் மூலம் பூர்த்தி செய்யலாம்.
அதை விடுத்து நேரடியான உறவு என்பது, பாதுகாப்பற்ற முறையில் இருக்கையில் விளைவுகள் மோசமானதாக அமையும். ஆணுறை போன்ற பாதுகாப்பான அம்சமும் சில நேரங்களில் தோல்வியடைவதற்கான வாய்ப்பிருக்கிறது. இதனால் கரு உருவாகலாம். பாதுகாப்பான முறையாக இருந்தாலும் ஆபத்து நேரலாம் என்பதால் குறிப்பிட்ட வயது வரை உடலுறவு மேற்கொள்ளாமல் இருத்தல் நல்லது” என்றார்.
சட்டப்படி இவ்வழக்கை எப்படி அணுகலாம் என்று வழக்கறிஞர் மோகனிடம் பேசினோம். அவர்,”போக்சோ சட்டம் பெண் குழந்தைகளுக்கான சட்டமாக மட்டும் பொது சமூகத்தால் பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டமானது பாலின பேதமற்று குழந்தைகளுக்கான சட்டமாக பார்க்கப்பட வேண்டும்.
இன்று ஆண் குழந்தைகள் மீதும் பாலியல் வன்கொடுமை நடத்தப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க குழந்தை மீதான கட்டாயப்படுத்தப்பட்ட உடலுறவே போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும். உடன்பட்ட உடலுறவு என்பது பதின் பருவத்தில் இயல்பானது.

ஆனால் இது பாதுகாப்பான முறையில் இருப்பது அவசியம். இவ்வழக்கைப் பொறுத்தவரை, 25 வயது ஆணும் 15 வயது பெண்ணும் சம்பந்தப்பட்டுள்ளனர். இருவருக்கும் இடையேயான வயது இடைவெளி அதிகமாக உள்ளது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட காதல் மற்றும் அவர்களின் சூழ்நிலை பொறுத்தே இது குற்றமா… இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும்” என்றார்.
உடலுறவு மேற்கொள்ளலாமா? வேண்டாமா? என்ற கலாச்சார ரீதியான விவாதத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் உடலுறவினை அறிவியல் ரீதியாக அணுகுவது அவசியம். ஆனால் உடலுறவானது எந்த விதத்திலும் பெண்ணின் உடலையும், அவளது கல்வி மற்றும் முன்னேற்றத்தையும் பாதிக்காமல் இருக்க வேண்டும்.
from Tamilnadu News https://ift.tt/oWBw9Pj
