அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு: முழு அப்டேட்ஸ்

அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை ரெய்டு

சென்னை மற்றும் விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று மேற்கொண்ட திடீர் சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ‘ரெய்டு’ பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்த அதிரடியாக அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையினர் வளையத்துக்குள் வந்துள்ளார்.

பொன்முடியின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனம், தொழில் நிறுவனம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு சென்றிருக்கும் இன்றைய நாளில், தி.மு.க அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த நிலையில், இந்த ரெய்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமலாக்கத்துறையின் இந்த திடீர் ரெய்டுக்கு என்ன காரணம்?இது தொடர்பான தலைவர்களின் ரியாக்சன் உள்ளிட்டவை குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

——–

“எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் மீதான எரிச்சலால் அமலாக்கத்துறையை ஏவியிருக்கிறது பாஜக!” – ஸ்டாலின்

படிக்க இங்கே க்ளிக் செய்க…

ராகுல் காந்தி: ஸ்டாலின் முயற்சி பலனளிக்குமா?,

ஸ்டாலின், மம்தா, ராகுல் – எதிர்க்கட்சிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவின் ஜனநாயகத்தை, அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காப்பாற்ற இந்தியாவே அணி திரண்டுவிட்டது என்பதைத்தான் பாட்னா கூட்டம் உணர்த்துகிறது. எங்களது அரசியல் இலக்கு நிச்சயம் வெல்லும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. காங்கிரஸையும் இணைத்துக்கொண்டுதான் பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஸ்டாலின் தொடர்ந்து ராகுல் காந்தியை முன்னிறுத்திப் பேசிவரும் நிலையில், அவரது இந்த கண்ணோட்டத்தை மற்ற மாநில கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா..?

இது குறித்த விரிவான அலசல் கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…

வயதாவதை குறைக்கும் மாத்திரை…  ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

Old age couple – Representational image

ளமை என்பது நிரந்தரமல்ல, எல்லோருக்கும் ஒரு நாள் வயதாகும். வயது அதிகரிப்பதையும், முதுமை அடைவதையும் யாராலும் தடுக்க முடியாது.

இந்நிலையில், வயதினை ஒரு வாரத்திற்குள்ளாகவே குறைக்கும் ரசாயன மாத்திரையை (chemical cocktail) ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

ஆடி அமாவாசை : Photo Album

இராமேஸ்வரத்தில் பக்தர்கள்

ஆடி அமாவாசை : ராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முன்னோரை வழிபடக் குவிந்த பக்தர்கள்! |Photo Album

பார்க்க இங்கே க்ளிக் செய்க…

—————

‘உதவி பண்ணினா ரூ.10,000 வெகுமதி!’ விபத்தில் யாராச்சும் அடிபட்டா, ஹெல்ப் பண்ணாம போயிடாதீங்க!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

சுந்தர் பிச்சைக்கு டஃப் கொடுக்கும் பெண் சி.இ.ஓ ஜெயஶ்ரீ உல்லால்!

ஜெயஶ்ரீ உல்லால்

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்யா நாதெள்ளாவையும் அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய சி.இ.ஓ-க்களாக கூறுவார்கள்.

ஆனால் இவர்களைவிட அதிக சம்பளம் வாங்கும், இந்தியாவை சேர்ந்த ஜெயஶ்ரீ உல்லால் என்ற பெண்மணியைத் தெரியுமா?

படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘ஒரு போட்டோ 40 ரூபாய்’… ஆபாசப் புகைப்படங்களை விற்ற பிடெக் பட்டதாரி கைது!

ஆபாசப் படம்

சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளிக்காக துணி எடுக்க சென்னையிலுள்ள பிரபல கடை ஒன்றுக்குச் சென்றிருக்கிறார்.

இந்த நிலையில், அந்தப் பெண்ணின் புகைப்படங்கள் ஆபாசமாகச் சித்திரிக்கப்பட்டு Telegram என்ற செயலியில் பதிவுசெய்யப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அந்தப் பெண் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

போலீஸார் விசாரித்தனர். அப்போது ஈரோட்டிலிருந்துதான் பெண்ணின் புகைப்படம் ஆபாசமாகச் சித்திரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

கிரெடிட் ஸ்கோர்: அவசியம் தெரிய வேண்டியவை…,

கிரெடிட் ஸ்கோர்

வீட்டுக் கடன், தனிநபர் கடன் என எந்தக் கடனாக இருந்தாலும், அது நமக்கு விரைவாகவும், குறைந்த வட்டி விகிதத்திலும், நல்ல நிறுவனங்களிடம் இருந்தும் கிடைக்க வேண்டும் எனில், நம் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன…

இந்த கிரெடிட் ஸ்கோரை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன என்பதை இந்த வார நாணயம் விகடன் இதழில் விளக்குகிறார் நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன்.

படிக்க இங்கே க்ளிக் செய்க…

தக்காளி இல்லாத சமையல்… ஆரோக்கியமானதா?

தக்காளி

க்காளி விலையேற்றம், இனி தக்காளி தேவைதானா என்றே யோசிக்க வைத்திருக்கிறது.

சுவை என்பதைத் தாண்டி தக்காளி நம் ஆரோக்கியத்திலும் முக்கியத்துவம் பெறுகிறதா?

தக்காளியில் உள்ள சத்துகள் என்னென்ன? தினமும் எந்த அளவில் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்?

நிபுணர்கள் விளக்குகிறார்கள்.

படிக்க இங்கே க்ளிக் செய்க…

“வாழ்க்கையில நிறைய அடிபட்டு வந்ததனால…” – விஜய் ஆண்டனி நேர்காணல்!

விஜய் ஆண்டனி

” ‘பிச்சைக்காரன்’; படம் வந்தப்போ பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுன்னு சொன்னாங்க. `பிச்சைக்காரன் – 2′ படம் வந்தப்போ புது 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்ப வாங்கிட்டாங்க.

‘பிச்சைக்காரன் – 3’ படம் வந்தால் இந்தியாவில் ரூபாய் நோட்டுகளே இருக்காது. ஒன்லி டிஜிட்டல் மணி மட்டும்தான் இருக்கும். ஏழைகளுக்காக 5, 10 ரூபாய் நோட்டுகள் மட்டும் புழக்கத்தில் இருக்கும்” என ஜாலியாக உரையாடலைத் தொடங்கினார் விஜய் ஆண்டனி…

இன்று வெளியான Vikatan Plus இதழில் இடம்பெற்றிருக்கும் அவரது பேட்டியை படிக்க இங்கே க்ளிக் செய்க…

from Tamilnadu News https://ift.tt/F1zqles