உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தஸ்லிம் என்பவர் ‘டிரேடிங் ஹப் 3.0’ (Trading Hub 3.0′) என்ற யூடியூப் சேனலை நடத்திவருகிறார். இந்த சேனலில் ஷேர் மார்க்கெட் தொடர்பான தகவல்களை வீடியோக்களாகத் தயாரித்து பதிவேற்றி வருகிறார். இந்த நிலையில், தஸ்லிம் பல ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி, கிட்டத்தட்ட ரூ.1 கோடி சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்ததாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அவரின் குடும்பத்தினர் இதை மறுத்திருக்கின்றனர். மேலும், இது தொடர்பான தகவல் வருமான வரித்துறைக்கும் சென்றிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, தஸ்லிம் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.24 லட்சம் ரொக்கம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் புகாருக்குப் பின்னணில் சதி இருப்பதாக தஸ்லிமின் சகோதரர் பிரோஸ் தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய சகோதரன் மார்க்கெட்டிங் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுவருகிறார்.
மொத்த யூடியூப் வருமானமாக கிடைத்த ரூ.1.2 கோடி வருமானத்துக்கு ஏற்கெனவே ரூ.4 லட்சம் வரி செலுத்தப்பட்டுவிட்டது. நாங்கள் எந்தத் தவறான வேலையையும் செய்யவில்லை. இது தஸ்லிமை குறிவைத்து தாக்கும் திட்டமிட்ட சதி” எனத் தெரிவித்திருக்கிறார். தஸ்லிமினின் தாயும் தன் மகன்மீது தவறாக குற்றம்சாட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/FbXrjmo
