மிஸ்டர் கழுகு: உதயநிதி துறையில் வெடித்துள்ள சர்ச்சை!

” பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்குவதற்கு 10 நாள்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்தினார்கள்; இந்த முறை பெங்களூரு கூட்டத்துக்குப் புறப்படும்போதே பொன்முடி வீட்டில் ரெய்டு நடத்துகிறார்களே… என்று டென்ஷனாகியிருக்கிறார் முதல்வர். “
– மிஸ்டர் கழுகு தரும் எக்ஸ்க்ளூஸிவ் தகவல்கள்…
* மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழா தி.மு.க-வுக்குள் ஏற்படுத்தியுள்ள சலசலப்பு
* கனிமொழித் தரப்பின் கொதிப்பு
* உதயநிதியின் துறையில் வெடித்துள்ள சர்ச்சை
* ஆர்.எஸ்.எஸ் சீனியர்களின் புலம்பலால் அண்ணாமலை விஷயத்தில் நாக்பூர் எடுத்துள்ள முடிவு
* மதுரை அதிமுக மாநாட்டால் பொருமும் நிர்வாகிகள்
உள்ளிட்ட உயர்மட்ட உள்ளடி தகவல்களைத் தருகிறார் கழுகார்…
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
அனிதா ராதாகிருஷ்ணன்: ‘அமலாக்கத்துறையின் அடுத்த ஆட்டம்’

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
2001-06 அ.தி.மு.க அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது, 2006-11 தி.மு.க ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்கு தொடுத்தது. தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் அந்த வழக்கு தொடர்ந்து நடந்துவருகிறது.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
அஜித் பவார், உத்தவ் தாக்கரே சந்திப்பு! – என்ன நடந்தது?

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்த மாத தொடக்கத்தில் இரண்டாக உடைந்தது. அஜித் பவார் தலைமையில் 9 பேர் பா.ஜ.க கூட்டணி அரசில் அமைச்சர்களாகப் பதவியேற்றிருக்கின்றனர். அவர்களின் பதவியேற்பால் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றிருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார், இப்போது பா.ஜ.க கூட்டணி அரசிலும் துணை முதல்வராகவே நீடிக்கிறார்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
——
“எதிர்க்கட்சிகளுக்கு நாங்கள் ‘தீண்டத்தகாதவர்களா..?” – ஒவைசி கட்சி காட்டம்
தமிழகத்தில் மோசடி நிறுவனங்கள் தலைவிரித்தாட என்ன காரணம்?

தமிழகத்தில் எழுத்தறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை அதிகம். நிதிக் கல்வி பெற்ற மக்களும் நிறையவே இருக்கின்றனர்.
இந்த நிலையில் மோசடி நிதி நிறுவனங்களின் லீலைகள் அடுத்தடுத்து அம்பலமாகி, மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை இழந்தபின்னும், விட்டில் பூச்சிகள் போல தமிழகத்தில் மக்கள் மீண்டும் மீண்டும் அதில் போய் விழுவது ஏன்?
இது குறித்த விரிவான அலசலை படிக்க இங்கே க்ளிக் செய்க…
லிஃப்ட் கேட்டு வந்த மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்! – கரூர் `பகீர்’

பைக்கில் லிஃப்ட் கேட்டு ஏறிச் சென்ற மாணவியைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துப்போய் இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கல்லூரிக்குச் செல்வதற்காக கரூரிலிருந்து ராசிபுரத்துக்குப் பேருந்தில் சென்றிருக்கிறார். அப்போது, ஆண்டகளூர் கேட் பகுதியில் பேருந்தை விட்டு இறங்கி அந்த மாணவி தனது கல்லூரிக்குச் செல்ல, அந்த வழியாக பைக்கில் வந்த முன்பின் தெரியாத இளைஞர் ஒருவரிடம் லிஃப்ட் கேட்டிருக்கிறார்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
மாஞ்சோலை: குழந்தைகள் கூலிகள் ஆக்கப்பட்ட ‘அரை ரேட்’ கதை!

1980களின் இறுதியில் ஒருநாள், மாஞ்சோலையில் பாறைகள் நிறைந்த வரக்கட்டு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர் பள்ளி மாணவர்களான ஆரோக்கியசாமியும், ஜோஸ்-ம்..
அப்போது அந்தப் பக்கமாய் ஜீப்பில் வந்த எஸ்டேட் மேலாளர், “எங்க போறீங்க?” என்று விசாரிக்கையில், `ஓடையில் மீன் பிடிக்கச் செல்கிறோம்’ என்று பதிலுரைத்த அவர்களிடம், அந்தக் காட்டில் தரையில் இருந்த களைகளைப் பிடுங்கச் சொன்னார்.
மாஞ்சோலை எஸ்டேட்டில் குழந்தைகள் கூலிகள் ஆக்கப்பட்ட ‘அரை ரேட்’ கதையை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
மீண்டும் மலர்கிறதா அ.தி.மு.க-பா.ம.க கூட்டணி?

‘தி.மு.க பக்கம் செல்ல நேரம் பார்த்துக் காத்திருக்கிறது பா.ம.க’ என்று அவ்வப்போது தகவல்கள் வெளியான நிலையில், டெல்லி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அ.தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் ஒருசேர அழைப்பு விடுத்தது பா.ஜ.க.
“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யார் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவுசெய்வோம்” என அ.தி.மு.க சொல்லும் நிலையில், ” அ.தி.மு.க கூட்டணியிலிருந்துதான் நாங்கள் விலகியிருக்கிறோம். பா.ஜ.க-வுடனான கூட்டணி இப்போதும் தொடர்கிறது” என பா.ம.க தரப்பிலும் பேசிவருகிறார்கள்.
உண்மையில் கூட்டணி தொடர்பாக என்னதான் நடக்கிறது… மீண்டும் மலர்கிறதா அ.தி.மு.க-பா.ம.க கூட்டணி..?
இது குறித்த விரிவான அலசல் கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…
‘மக்கானா’ ஹெல்த்தான ஸ்நாக்ஸா..?

இன்று பெரும்பாலான யூடியூப் சேனல்களில் செய்து காண்பிக்கப்படும் மக்கானா, பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஹெல்த்தான ஸ்நாக்ஸ். இயற்கையானது மற்றும் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என்றும் சொல்லப்படுகிறது.
உண்மையில் மக்கானா என்பது என்ன… எங்கிருந்து கிடைக்கிறது… உடல்நலத்துக்கு ஏற்றதா, குழந்தைகள் முதல் எல்லா வயதினரும் உட்கொள்ளலாமா எனப் பல்வேறு கேள்விகள் நம்மில் எழக்கூடும்.
பதில் சொல்கிறார் உணவியல் ஆலோசகர் விஜயஸ்ரீ. படிக்க இங்கே க்ளிக் செய்க…
‘லியோ’ அப்டேட்ஸ்: ஆடியோ லான்ச் எப்போது?

மாநகரம் படத்தின் மூலம் அறிமுமாகி கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோவையில் தனியார் கல்லாரியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், செய்தியாளர்களிடம் லியோ அப்டேட் குறித்து அளித்த தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
from Tamilnadu News https://ift.tt/JbDme3E
