மணிப்பூர் விவகாரம்: கடுமை காட்டிய  நீதிமன்றம்… மவுனம் கலைத்த மோடி! 

மோடி – மணிப்பூர் கலவரம்

பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மணிப்பூரில், பெரும்பான்மைச் சமூகமான `மைதேயி’ இன மக்களுக்கும், பழங்குடிச் சமூகமான `குக்கி’ இன மக்களுக்கிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்துவரும் மோதலால், மாநிலமே கலவரக்காடாக பற்றியெரிகிறது.

இப்படியான மோசமான சூழலில், மணிப்பூரில் குக்கி இன பெண்கள் இருவரை ஆண்கள் கூட்டம் ஒன்று துன்புறுத்தி, நிர்வாணமாக சாலையில் இழுத்துச் செல்லும் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.

இதைத் தொடர்ந்து, மணிப்பூர் கலவரம் குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்து வந்த பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இன்னொரு புறம் உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அரசுக்கு ‘கெடு’ விதித்தது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பான முழு அப்டேட்ஸை படிக்க இங்கே க்ளிக் செய்க…

———-

தலைவர்கள் கண்டனம்

மணிப்பூர்: “முக்கியக் குற்றவாளி கைது; மரண தண்டனை வழங்க அரசு முயற்சி செய்யும்!”- முதல்வர் பிரேன் சிங்

படிக்க இங்கே க்ளிக் செய்க…

———–

மணிப்பூர்: “நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடிப் பெண்கள் அல்ல, பாரதத் தாய்; நாட்டுக்கே தலைகுனிவு”- சீமான்

படிக்க இங்கே க்ளிக் செய்க…

—————–

‘இந்தியக் குடிமகளாக வேதனையடைகிறேன்’ – காங்கிரஸ் பழங்குடிப் பிரிவு மாநிலத் தலைவர்

படிக்க இங்கே க்ளிக் செய்க…

கழுகார் அப்டேட்ஸ்:  ‘மாஜிக்கு வந்த அழைப்பு!’

கழுகார் அப்டேட்ஸ்

திர்க்கட்சிகள் ஒன்றிணைந்துவருவதால், ‘எங்ககிட்டயும் சீப்பிருக்கு… நாங்களும் சீவுவோம்ல’ கதையாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை, டெல்லியில் நடத்தியிருக்கிறது பா.ஜ.க.

அந்தக் கூட்டணியிலேயே பெரிய கட்சி என்பதால், அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடியை மோடிக்கு அருகே அமரவைத்ததுடன், கூடுதல் முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார்கள். தனக்குக் கிடைத்த ‘தென்னிந்தியப் பிரதிநிதி’ அந்தஸ்தால் குஷியான இ.பி.எஸ்., ஊர் திரும்பிய பிறகும் சிரித்தபடியே காட்சி தந்தாராம்.

கழுகார் அப்டேட்ஸில் மேலும்…

வேட்டியை மாற்றிக் கட்டு… மாஜிக்கு வந்த அழைப்பு!

‘வேல்’ வீச வந்த கட்சித் தலைவர்… நைஸ் செய்து அனுப்பிய அமைச்சர்!

டெல்லி அளித்த முக்கியத்துவம்… குஷியில் இ.பி.எஸ்… கடுப்பில் ஓ.பி.எஸ்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

பொன்முடி: இந்தோனேஷியாவில் முதலீடா? 

அமைச்சர் பொன்முடி

மைச்சர் அமைச்சர் பொன்முடியின் சென்னை, விழுப்புரம் இல்லம் தொடங்கி அவர் தொடர்புடைய ஏழு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அதோடு, அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று நள்ளிரவு வரை விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

ரூ.1000 உரிமைத்தொகை… ஏ டூ இசட் வழிகாட்டல்கள்…

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை…

களிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக 1000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட’த்தை அறிவித்ததோடு, பயனாளர்களுக்கான தகுதி வரையறைகளையும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இதில் பல குழப்பங்கள்,சந்தேகங்கள் இருக்கும் நிலையில் யாரெல்லாம் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும் என்பது உள்ளிட்ட

ஏ டு இசட் வழிகாட்டல்கள்…

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

‘பாஸ்வேர்டு…’ – பயனாளர்களுக்கு நெட்ஃபிக்ஸ் வைத்த செக்!

Netflix – நெட்ஃபிக்ஸ்

பிரபல ஓ.டி.டி நிறுவனமான நெட்ஃபிக்ஸ் (Netflix) இந்தியப் பயனாளர்கள் தங்கள் பாஸ்வேர்டை (password) மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதைத் தடுப்பதற்கு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்தியப் பயனாளர்களுக்கு நெட்ஃபிக்ஸ் நிறுவனம் இமெயில் வாயிலாக தெரிவித்துள்ள தகவலை படிக்க இங்கே க்ளிக் செய்க…

Asia Cup 2023: வசனங்களை அள்ளிவிட்டால் மட்டும் போதுமா ஜெய் ஷா?

Asia Cup 2023: ஜெய்ஷா

டந்த காலத்தைப் பொறுத்தவரையில் பாகிஸ்தானில் போட்டிகள் நடந்தால் பங்கேற்கமாட்டோம் என்பது பி.சி.சி.ஐ-யின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது என்பது கிரிக்கெட்டை தொடர்ந்து கவனிப்பவர்கள் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் ஆசியக்கோப்பைக்கான அட்டவணை வெளியாகியிருக்கிறது.

அந்த அட்டவணை பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதைப் பற்றிய அலசலை படிக்க இங்கே க்ளிக் செய்க…

——–

Kohli: ‘சச்சின், பாண்டிங்கைவிட அதிக ரன்கள்’ – சாதிக்கப்போகும் கோலி!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

தமிழகம்: குழந்தைகளுக்கு அதிகரித்த புற்று நோய்!

குழந்தைகள்

குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ICMR), உலக சுகாதார நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டில் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவை, மத்திய – மாநில அரசுகள் சாதாரணமாகக் கடந்து போக முடியாது. அந்த அளவுக்கு அரசுகளைக் கண் விழிக்கச் செய்திருக்கிறது அந்த ஆய்வு தந்திருக்கும் ஒரு புள்ளிவிவரம்.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது புதுடெல்லியில்தான் குழந்தைப் பருவ புற்றுநோய் பாதிப்பு அதிகம்’ என்கிறது அந்த அறிக்கை. மேலும், இதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பதுதான் நம் கவலையை இன்னும் அதிகரிக்கிறது.

இத்தகைய சூழலில் அரசுகள் செய்ய வேண்டியது என்ன..?

இன்று வெளியான ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் இது குறித்த சிறப்பு கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘நம்மவர்’ : டென்ட்கொட்டாய் டைரீஸ்

நம்மவர்

மல்ஹாசனின் சிலபல திரைப்படங்கள், சில வருடங்களுக்குப் பிறகு தாமதமாகத்தான் சிலாகிக்கப்படும். ‘அடடே… அப்பவே இப்படி!’ என்று வியக்கப்படும்.

‘குணா’ போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம். இது ஒரு வகை. இன்னொரு வகையும் உண்டு. சில படங்கள் வெளிவந்த புதிதில் மட்டுமல்ல, சில வருடங்கள் கழித்தும் கூட கண்டுகொள்ளப்படாமலேயே போய் விடும் துரதிர்ஷ்டம் நிகழும். அப்படியொரு படம்தான் ‘நம்மவர்’.

படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களுடன் கூடிய விரிவான அலசலை படிக்க இங்கே க்ளிக் செய்க…

from Tamilnadu News https://ift.tt/7QZbajr