கோவை: கமல்ஹாசனை வைத்து திமுக புதிய திட்டம்?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், “மக்களோடு மய்யம்” என்ற ஒரு நிகழ்வை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர். இதில் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து, அவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் அறிந்து அவற்றை வாக்குறுதியாக அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
கோவையில் ஏற்கெனவே கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேலு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்த விரிவான பின்னணி தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்க…
மணிப்பூர்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அஞ்சுகிறதா பா.ஜ.க?

மணிப்பூர் பிரச்னை குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து மட்டுமல்லாமல், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர். இதுதான் பிரச்னை. அதற்கு எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்க மத்திய அரசு அஞ்சுகிறதா..?
அப்படி அச்சப்படுகிறது என்றால் அதற்கான காரணம் என்ன..?
இது குறித்த விரிவான அலசலை படிக்க இங்கே க்ளிக் செய்க…
——-
‘மணிப்பூர் கலவரத்துக்கு பாஜக அரசும் உடந்தை!’ – பாஜக எம்.எல்.ஏ ‘பகீர்’ குற்றச்சாட்டு
இது தொடர்பாக அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள பத்தியை ( Coloumn) படிக்க இங்கே க்ளிக் செய்க…
‘விஜய்’ குறித்த கேள்வி… பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

சென்னையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை, இந்த நிமிடம் வரை யாருடனும் கூட்டணியில் இல்லை. அது தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அல்லது அ.தி.மு.க-வோ எதுவாக இருந்தாலும் நாங்கள் கூட்டணியில் இல்லை.
கூட்டணியில் இல்லாதபோது அவர்கள் எப்படி அழைப்பார்கள். எனவே, அழைப்பு இல்லை என்பது தவறான கருத்து” என்றார்.
இந்த நிலையில், ‘விஜய் அரசியலுக்கு வருவாரா?’ என்பது குறித்த கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் ஆவேசத்துடன் அளித்த பதிலை படிக்க இங்கே க்ளிக் செய்க…
மகிழ்ச்சியான செய்தி… EPF வட்டியை உயர்த்த அரசு ஒப்புதல்!

இ.பி.எஃப் (EPF) பயனாளிகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, 2022-23-ம் நிதியாண்டுக்கு இ.பி.எஃப் பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட வட்டித் தொகை செலுத்தப்படும்.
இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
சைதாப்பேட்டை ரயில் நிலைய கொலையில் சிக்கிய தங்கை!

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கடந்த 19-ம் தேதி இரவு ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் கொலைசெய்யப்பட்டார்.
ரயில் நிலையத்தில் சிசிடிவி-கேமராக்கள் இல்லாததால் கொலையாளிகளைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
ஸ்வீட் சாப்பிடணும் போல இருக்கா..? – உஷார்!

கன்னாபின்னாவென இனிப்பு சாப்பிடுகிறவர்கள் நம்மில் பலர். அதிக இனிப்பு ஆரோக்கியக் கேடு என்று தெரிந்தாலும் இவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாது.
“இனிப்புத்தேடல் என்பது உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்னை இருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம்” என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன், இனிப்புத் தேடலுக்கான காரணங்கள், அதைக் கட்டுப்படுத்துவது எப்படி… என எல்லாவற்றையும் விளக்குகிறார்.
சம்பளம் எவ்வளவு… செலவு – சேமிப்பு எவ்வளவு?

‘வாங்கற சம்பளம் செலவுக்கே சரியா போயிடுது’, ‘எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் பத்தவே மாட்டேங்குது’ என்ற புலம்பலை பல இடங்களில் கேட்டிருப்போம்.
பெரும்பாலும் ரூ.30,000-க்குக் கீழ் சம்பளம் வாங்குபவர்களுக்கு சேமிப்பு மற்றும் முதலீடு என்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால், செலவுகளுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது.
இது போன்றவர்கள் எப்படி சேமிக்க வேண்டும், எவ்வளவு சேமிக்கலாம் என்பது போன்ற ஆலோசனைகளை வழங்குகிறார் குடும்ப நிதி நிபுணர் லலிதா ஜெயபாலன்…
” ‘லியோ’ படத்தில் ‘மாமன்னன்’ பட நடிகர்?!” – ராமகிருஷ்ணன் நேர்காணல்

‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் ராமகிருஷ்ணன். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர். சமீபத்தில் வெளியான `மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தவர்.
‘லியோ’ படத்தில் ‘நான் ரெடி தான்!’ பாடலில் விஜய்யுடன் நடித்திருந்தார். அவரது சினிமா பயணம் குறித்த ஒரு நேர்காணல்.
from Tamilnadu News https://ift.tt/tj7npaD
