கன்னியாகுமரி:

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் `கக்கன்’ திரைப்படத்தின் ஒலிநாடா, ட்ரைலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
நீலகிரி:

தமிழ்நாடு அரசுத் தோட்டக்கலைத்துறை மூலம் 75 சதவிகித மானியத்தில் மலேயன் ஆப்பிள், சூரினாம் செர்ரி, பட்டர் ஃபுரூட் , ஆசிட் லைம் உள்ளிட்ட பல்வேறு பழ மரக்கன்றுகளை வழங்கும் திட்டம் தொடங்கியது.

சென்னையில் மிதமான மழை பெய்தது.

இடம்: மெரினா கடற்கரை

விழுப்புரம்:

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் விழுப்புரம் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியை ஆய்வுசெய்தனர்.

புதுச்சேரி:

பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை மூலம் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் குறித்து சபாநாயகர் செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை:

மாணவர்களுடன் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்து அறிவுரை கூறினார்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் சமத்துவ மக்கள் கொண்டாடும் புனித சந்தியாகப்பரின் தேர் பவனி திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி:

உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு, ஆலய வளாகத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி, புதுக்குப்பம் பகுதியில், `சான்ட் டியூன்ஸ்’ கடற்கரையில் நடைபெறும் மாநில அளவிலான ஐவர் கடற்கரை கால்பந்து போட்டிகளை சபாநாயகர் செல்வம் தொடங்கிவைத்தார்.
கடலூர்:

மணிப்பூர் விவகாரத்தில் பா.ஜ.க., அரசைக் கண்டித்து, கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத்
திட்டத்தின்கீழ், உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவுசெய்யும் முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் ராமநாதசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
வேலூர் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் சி.ஐ.டி.யு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்:

மணிப்பூர் மாநில முதல்வர் பதவி விலக வலியுறுத்தி, சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு பெண் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மணிப்பூர் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் அ.தி.மு.க-வின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% உள் இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் ரங்கசாமிக்கு, அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் நன்றி தெரிவித்தார்.
புதுச்சேரியில் குஜராத் மாதிரி டயாலிசிஸ் முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் கவர்னர் தமிழிசை தலைமையில் நடைபெற்றது.
ஈரோட்டில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை, முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்
ஈரோடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் ரூ.1.5 கோடி செலவில், ஸ்டென்டர் இயந்திரத்தை அமைச்சர்கள் சு.முத்துசாமி, காந்தி ஆகியோர் தொடங்கிப் பார்வையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம், தாயில்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு. வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்றது.
கன்னியாகுமரி முப்பந்தல் ஸ்ரீ ஆலமூடு அம்மன் திருக்கோயில் ஆடிக்கொடை விழாவை முன்னிட்டு, பக்தர்களின் முளைப்பாரி, வேல்குத்துதல் மற்றும் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்:

காவிரியின் குறுக்கே மேக்கேகதாட்டூவில் அணை கட்டும் முயற்சிகளைக் கைவிடக் கோரியும், நீதிமன்றத் தீர்ப்பின்படி உரிய நீரை வழங்கக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு முதல் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என துணைவேந்தர் குர்மீத்சிங் தெரிவித்திருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/6HyvPeA