‘ஸ்டாலின் ஆட்சிக்கு 10 கதவுகள்’: விமர்சித்தாரா திமுக மா.செ? – வைரல் ஆடியோ!

முதல்வர் ஸ்டாலின்

கோவை திமுக மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் நா.கார்த்திக். இவர் பேசுவதாக ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் திமுக அரசு குறித்து கடுமையாக விமர்சிப்பதாக உள்ளது.

“ஆட்சிக்கு 10 கதவுகள் இருக்கக் கூடாது. அரசியலில் இவர் ஒருவர் மட்டுமே முடிவு எடுப்பது போல இருக்க வேண்டும்” என நா.கார்த்திக் கூறுவதாக உள்ளதோடு, அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அண்ணாநகர் கார்த்தி உள்ளிட்டவர்கள் குறித்தும் அந்த ஆடியோவில் கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்த விரிவான தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்க…

பிரேமலதா வார்னிங்… கொதிக்கும் விஜய் தரப்பு!

பிரேமலதா விஜயகாந்த் – விஜய்

டிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதிலுக்கு, விஜய் தரப்பிலிருந்து கடுமையான ரியாக் ஷன் வெளிப்பட்டுள்ளன.

சென்னை, கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் கடந்த 24-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதற்கு அந்தக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார். இதில், 70-க்கும் மேற்பட்ட மா.செ-க்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

மணிப்பூர்: நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்?!

மணிப்பூர் கலவரம்

ணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என மத்திய அரசு கூற, ‘குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள்’ எனப் பிரதமர் மோடி முதல்முறையாக மணிப்பூர் விவகாரத்தில் வாய்திறந்தார்.

ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள்முதல், நேற்றுவரை மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்காமல், எதிர்க்கட்சிகள் அமளி எனக் கூறி இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், பிரதமர் மோடி அவைக்கு வந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க அரசு மறுத்து வருகிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

—–

மணிப்பூர் சம்பவத்தை வெளிநாடுகளும், சர்வதேச ஊடகங்களும் எப்படிப் பார்க்கின்றன?!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘இந்தியா’ பெயர் – எதிர்க்கட்சிகளைச் சாடிய மோடி!

மோடி – எதிர்க்கட்சிகள் – இந்தியா (I.N.D.I.A) கூட்டணி

காங்கிரஸ் தலைமையில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட 26 கட்சிகள் கடந்த வாரம் பெங்களூரில், 2024-ல் பா.ஜ.க-வை வீழ்த்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா (I.N.D.I.A)’ எனப் பெயரும் வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் கூட்டணியின் `இந்தியா’ என்ற பெயரை பா.ஜ.க விமர்சித்து வந்தது.

இந்த நிலையில், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவில்கூட `இந்தியா’ இருக்கிறது என எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியைப் பிரதமர் மோடி விமர்சித்திருக்கிறார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

IRCTC இணையதளம் முடங்கியது ஏன்?

ஐ.ஆர்.சி.டி.சி

யில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது மொபைல் செயலி வழியாக ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம். இந்நிலையில், இன்று ஐ.ஆர்.சி.டி.சி தளம் முழுவதுமாக முடங்கிவிட்டது.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் மொபைல் செயலி இரண்டுமே முடங்கிவிட்டதால் பயணிகள் ரயில் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் தவித்தனர். மேலும், இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இது குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

நிலமா… தங்கமா… எந்த சேமிப்பு சிறந்தது?

நிலமா… தங்கமா…

திர்காலத்துக்காகச் சேமிக்க நினைக்கும் நம்மவர்களின் முதல் தேர்வாக இருக்கிறது நிலமும் தங்கமும். இந்த இரண்டிலும் பணம் போடும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன..?

எதிர்காலத் தேவைக்கு எந்த சேமிப்பு சிறந்தது… நிலமா… தங்கமா..?

கமாடிட்டி சந்தை நிபுணர் ஷியாம் சுந்தர் சொல்லும் முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்க…

வெண்மைப் புரட்சி… சிறப்பாக அமுல்; சீரழிவில் ஆவின்!

அமுல் பால்

நிர்வாகச் சீர்கேடுகள், உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களின் காரணமாக, தற்போது ஆவின் நிறுவனத்துக்குப் பரிதாப நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து கவலை தெரிவிக்கும் பலரும், குஜராத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான, அமுல் நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளைப் பட்டியலிடுகிறார்கள்.

அந்த வகையில்தான் பசுமை விகடன் வாசகர் சத்தார், அமுல் நிறுவனம் குறித்தும், இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு பெரும் பங்காற்றிய வர்கீஸ் குரியனின் அர்ப்பணிப்பு குறித்தும் சொல்லும் சில முக்கியத் தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்க…

சனி பகவான் வக்ர பெயர்ச்சி… பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள்!

சனி பகவான்

சூரிய பகவான் சஞ்சரிக்கக் கூடிய ராசிக்கு 5, 6, 7, 8, 9 ஆகிய ஸ்தானங்களில் சனி பகவான் பிரவேசிக்கும்போது வக்ரம் அடைவார் என்கின்றன ஜோதிட கிரந்தங்கள்.

அந்த வகையில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 2023 -ம் ஆண்டில் சனிபகவான் வக்ரம் அடையக் கூடிய நிலைகள் மற்றும் பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள் என்னென்ன என்பது குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

‘கங்குவா’- அப்டேட்ஸ்!

‘கங்குவா’ தோற்றம்

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கங்குவா’ முன்னோட்ட வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தில் ஏராளமான ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என சூர்யா, சிவா கூட்டணி உறுதிப்படுத்தியிருப்பதால், படத்தின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.

இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்ததில் கிடைத்த தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்க…

——–

நாகேஷின் பேரன், மயில்சாமியின் மகன்; இவர்களோடு ஹீராவாகக் களமிறங்கும் கவுண்டமணி!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

from Tamilnadu News https://ift.tt/twdPsLf