
தி.மு.க நிர்வாகிகள் ஊழல் குறித்த இரண்டாம் கட்ட பட்டியல் அடங்கிய புகாரை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் அந்தக் கட்சியினர் வழங்கினர். அதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் கரு.நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

என்.எல்.சி 2-வது சுரங்க விரிவாக்கப் பணிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கடலூர் சேத்தியாதோப்பு, வளையமாதேவி அருகே நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின.


கார்கில் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையிலுள்ள கார்கில் போர் வீரர்கள் நினைவிடத்தில் கவர்னர் செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், முப்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


ஊட்டி, குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி.

விவசாய மின் மோட்டார்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பான மின்துறை அறிக்கையைக் கண்டித்து, தி.மு.க உட்பட ஆதரவு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.


மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து, திராவிடர் கழக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கார்கில் போரில் இந்திய வீரர்களுக்கு உதவிய புதுச்சேரி டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸை, கவர்னர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி பாராட்டினர்.


சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் இன்று தேனியில் நடைபெற்றது.

சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட அல் ஆசிக், திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டான்.

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சி தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஈரோடு மாநகராட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பதாகைகளை கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பணி செய்து வருவதற்கு சம்பளம் முறையாக தராததைக் கண்டித்து, சேலம் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த ஊழியர்கள்.

அமைச்சர் பொன்முடி விழுப்புரம், நகராட்சி அலுவலகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ் நடைபெறும் விண்ணப்ப பதிவு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

திசையன்விளையில் முத்தையா என்ற இளைஞர் கொல்லபட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள்.

from Tamilnadu News https://ift.tt/0XEWYMh
