இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வை ஆட்சிக்கட்டிலிலிருந்து அகற்ற வேண்டும் என்ற முனைப்போடு, 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் கூட்டணிக்கு `I.N.D.I.A’ எனப் பெயர் சூட்டியிருக்கின்றன. ஆளும் கூட்டணி டெல்லியிலும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெங்களூரிலும் அண்மையில் கூட்டம் நடத்தின. என்.டி.ஏ கூட்டணியில் 36 கட்சிகளும், இந்தியா கூட்டணியில் 26 கட்சிகளும் இருக்கின்றன. ஆனால், இந்த இரு கூட்டணிகளிலும் இடம்பெறாத கட்சிகள் என சில கட்சிகள் இருக்கின்றன. அவர்களின் ஆதரவு யாருக்கு என்பது தேர்தல் நேரத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள்

இந்த நிலையில், ஆந்திராவில் ஆட்சியிலிருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, தற்போது அதன் ஆதரவு பா.ஜ.க-வுக்குத்தான் இருக்கும் என்பதை யூகிக்கும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மணிப்பூர் விவகாரத்தில் பா.ஜ.க அரசு பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை முன்வைத்தன. அதற்கு மத்திய அரசும் ஒப்புக்கொண்டது.

இந்த விவகாரத்தில் ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கும் என்றும், அதேபோல, டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்ற விரும்பும் டெல்லி அவசரச் சட்ட விவகாரத்திலும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கும் என்றும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் விஜய்சாய் ரெட்டி தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், நாடாளுமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 9 பேரும், மக்களவை உறுப்பினர்கள் 22 பேரும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனத் தெரியவருகிறது.

ஜெகன் மோகன் ரெட்டி

டெல்லி, பஞ்சாப்பில் காங்கிரஸ் – ஆம் ஆத்மிக்கு இடையே கடுமையான போட்டி இருந்தபோதிலும், மத்திய அரசின் அவசரச் சட்டம் விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கிறது. ஆனால், மாநிலங்களவையில் பெரும் பலத்துடன் இருக்கும் பா.ஜ.க அரசை ஆம் ஆத்மி வெற்றிப்பெற வேண்டுமானால், 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுத் தேவைப்படும். தற்போதுவரை டெல்லி அவசரச் சட்டத்துக்கு எதிராக, 238 உறுப்பினர்களில் 105 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

from Tamilnadu News https://ift.tt/U2HJLzI