தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினால் 1980-ம் ஆண்டு தொடங்கப்பட்டது தி.மு.க இளைஞர் அணி. முதல்வர் ஸ்டாலினுக்குப் பிறகு தி.மு.க இளைஞர் அணி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இயங்கி வருகிறது. இந்த அணியின், மாநில மாநாடு, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அதில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து, இந்த வாய்ப்பை வழங்கியுள்ள கழகத் தலைவருக்கு இளைஞர் அணியின் இந்த மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. தலைவரின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில், 10 லட்சம் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்து மாநாட்டுப் பணிகளைச் சிறப்புற மேற்கொள்ள, இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது.
நேற்று ராமேஸ்வரத்தில் நடந்த பா.ஜ.க கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னைப் பற்றி பேசியிருக்கிறார். நான் மக்களை சந்தித்து, தேர்தலில் போட்டியிட்டு, அதில் வெற்றிப்பெற்று, சட்டமன்ற உறுப்பினராகி, அதன்பிறகே அமைச்சரானேன். அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா எதன் அடிப்படையில், பிசிசிஐ-யின் செயலாளர் ஆனார்.

அவர் எத்தனை போட்டியில் கலந்துக்கொண்டு, எத்தனை ரன் அடித்ததால் பிசிசிஐ-யின் தலைவராக நியமித்தார்கள்… ஜெய் ஷா நடத்திவரும் நிறுவனத்தின் 2014-ம் ஆண்டின் மதிப்பு ரூ.75 லட்சம். ஆனால், இப்போது ரூ.130 கோடி. இந்த அசுர வளர்ச்சி எப்படி வந்தது எனப் பதில் சொல்வாரா மத்திய உள்துறை அமைச்சர்…” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/I3lsgdj
