சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் நவம்பர் 21-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி அமைப்பின் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 4 மணிக்கு நடக்கவிருந்ததாக அறிவிக்கப்பட்ட கூட்டத்துக்கு 5 மணிக்கு எடப்பாடி வந்தார். இதையடுத்து 5.10 மணிக்கு எம்.ஜி.ஆர் மாளிகையின் முதல் தளத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. மாலை 6 மணிக்கு நிறைவுபெற்ற ஆலோசனை கூட்டம் குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள் சிலரிடம் பேசினோம்.

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பு குறித்துதான் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த பூத் கமிட்டி அமைப்பு பணியை எட்டு மாதம் ஆகியும் எந்த மாவட்ட செயலாளர்களும் முழுமையாக முடிக்கவில்லை. இந்த பணிகள் முழுவதையும் நவம்பர் மாதம் 20-ம் தேதிக்குள் முடிக்கவேண்டுமென்று எடப்பாடி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். ஆனால், பல மாவட்டங்களில் 60 சதவிகிதத்துக்கும் குறைவாகதான் பணிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த ரிப்போர்ட்டை எடப்பாடி வாசித்து காட்டினார். அதில், `இப்பணிகளில் சிலர் தவறான தகவலையும் இணைத்திருக்கிறீர்கள்.
அதுவும் எனக்கு தெரியும். நீங்கள் செய்யும் தவறு, உங்களைதான் பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஸ்லோவாக இருந்தாலும் சரியாக, முறையாக பணியை செய்யுங்கள். தேர்தலுக்கு பூத் கமிட்டிதான் அடிப்படை. அம்மா இருக்கும்போதே இது சரியாக செய்யப்படவில்லை. ஆனால், 2016-ல் அம்மாவின் ஆளுமையால் வெற்றி சாத்தியமானது. பூத் கமிட்டி விவகாரத்தில் என்னால் அப்படி இருக்க முடியாது. அதனால்தான் அதற்கு முக்கியதுவம் கொடுக்கிறேன்.
இப்பணிகளை முழுமையாக முடிக்க, கடைசி வாய்ப்பு வழங்குகிறேன். அதன்படி, வரும் டிசம்பர் 3-ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து தலைமை கழகத்தில் அதற்குறிய விவரங்களை சமர்பிக்கவேண்டும்’ என்று எடப்பாடி உத்தரவிட்டு இருக்கிறார். அதேபோல, மா.செ.க்களை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவும் எடப்பாடி முடிவு செய்து இருக்கிறார்.” என்றனர் விரிவாக.

‘முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை அ.தி.மு.க அமைப்பு ரீதியாக கொண்டுள்ள 17 மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 22-ம் தேதி சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்து பேசவிருக்கிறார். அதன்படி, ஓவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் 15 நிமிடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 நிமிடத்தில் பூத் கமிட்டி, அமைப்பு மாவட்டத்தில் உள்ள பிரச்னை, நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து இதர மா.செ.க்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. பொறுப்பாளர்கள் மூலமாக மாவட்டச் செயலாளர்கள் குறித்த ரிப்போர்ட்டை எடப்பாடி ஏற்கனவே வைத்தி இருக்கிறார். அதோடு மா.செ.கள் கொடுக்கும் தகவல் சரியாக இருக்கிறதா என்று ஒப்பிடு செய்ய இருக்கிறார் எடப்பாடி. ஒருவேளை மா.செ.க்கள் சொல்வது தவறாக இருக்கும்பட்சத்தில் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ‘ என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/17oQe6T
