மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் நடந்த விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில் தொழில் பூங்கா விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையப்படுத்தும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 124 நாட்கள் தொடர்ந்து போராடிய 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டு அவர்களில் 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஆர்.பி.உதயகுமார்

இதில் அருள் ஆறுமுகத்தைத் தவிர 6 பேர் மீதான குண்டர் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எடப்பாடியார்  இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து தி.மு.க அரசின் பச்சோந்தித்தனத்தை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். போராட்ட தீவிரத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் அந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மீதும், விவசாயிகள் மீதும் தி.மு.க அரசு தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருகிறது.

மேல்மா விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தை தமிழ்நாட்டிலிருந்து பிரிப்பதை போன்று வேதனையான காட்சியாக இருக்கிறது. பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனங்களை எல்லாம்  நிறுத்தி விவசாய மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்த அரசு தவறான முறைகளை கையாண்டு வருகிறது.

 தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போது பல அமைப்புகளை திட்டமிட்டு தூண்டிவிட்டு தவறான பொய்யன தகவல்களை வெளியிட்டு அன்று அரசுக்கு எதிராக போராட்டங்கள் உள்நோக்கத்தோடு நடத்தியது என்றாலும், அந்த போராட்டங்களுக்கு அனுமதி வழங்கி காவல்துறை மூலம் பாதுகாப்பும் வழங்கினார் எடப்பாடியார்.

ஆனால், இப்போதைய தி.மு.க அரசு, விவசாயிகளின் போராட்டத்திற்கான  காரணத்தை கண்டறிந்து அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் விவசாயிகளை  ஒடுக்குவதற்கு காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி வருகிறது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலினுக்கு அருள் ஆறுமுகம் போராளியாக தெரிந்தார். ஆனால், இப்போது தீவிரவாதியாக தெரிவதன் மூலம் தி.மு.க அரசின் இரட்டை வேடம் தெரிகிறது.

 எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அந்த நிலங்கள் விவசாய பணிகளுக்கு பயன்படக்கூடியதாக இருந்ததால் நிலம் கையகப்படுத்தும் நிலைப்பாட்டை  கைவிட்டு திட்டங்களையும் ரத்து செய்து இருக்கிறார். அதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

ஆர்.பி.உதயகுமார்

காலம் மாறும், காட்சிகள் மாறும் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவார். அப்போது விவசாயிகளுடைய எண்ணத்தை நிறைவேற்றுகிற வகையில் நடவடிக்கைகளை எடுப்பார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு பாதுகாப்பு, அனுமதி வழங்கி நியாயமான கோரிக்கைகளாக இருந்தால் அதை நிறைவேற்றிக் கொடுத்தார். அதுதான் உண்மையான ஜனநாயகம். தங்கள் நிலங்கள் அபகரிப்பதை கண்டித்து  போராடும் மக்களை அரசு  இரும்புக்கரம் கொண்டு தடுப்பது வேதனையாக இருக்கிறது.

போராட்டத்தால் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க அந்த அடிப்படை உரிமையைக் கூட இந்த அரசு கொடுக்க மறுக்கிறது. இந்த கொடுங்கோல் ஆட்சி நீண்ட நாள் இருக்காது என்பது விவசாயிகளின் சாபமாக இருக்கிறது. மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை கனியோடு பரிசீலனை செய்து நியாயத்தின் பக்கம் நிற்பார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/qnu27cK